தமிழ்நாடு முதலமைச்சர், ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல அரசு பள்ளி கூடங்களுக்கு வகுப்பறைகள் மற்றும்–கலை அரங்கங்களை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த மக்கள் சேவகரும் – “தென் மாவட்டங்களில் சிறந்தகல்வி நன்கொடையாளர்” விருது பெற்றவருமான கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
தி.மு.க.வில் இணைந்த கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் விவரம் கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர் தோப்பூர் வி.அனிதா, மாவட்ட பொருளாளர் விஸ்வை கே.சந்திரன், கலப்பை மக்கள் இயக்க கௌரவ ஆலோசகர் விஜயன், மாநில துணைத் தலைவர் நந்தகுமார், மாநிலச் செயலாளர் எம்.ராஜ்குமார், மாநில இளைஞர் அணிச் யெலாளர் ஜே.ரவிமுருகன்;மாநிலப் பொறுப்பாளர் நாகர்கோவில் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் ஜி.சுபின்ஆனந்த் ஆகியோர் இணைந்தனர்.
மேலும் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வி.செல்வன், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஏசுதாசன், ஒன்றியச் செயலாளர் டி.ஜெகன், மாவட்ட ஐடி விங் பொறுப்பாளர் ஜி.செந்தில்;மாநில மருத்துவ அணி தலைவர் டாக்டர் கௌதம், சமூக சேவகர் சொர்ணப்பன், திரைப்படத் தயாரிப்பாளர் – இயக்குநர் விஷ்ணுஹாசன், நடிகர் விஜயபாலாஜி, மகளிர் அணி பொறுப்பாளர் லெட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.



