“நான் வெளியே போகக் கூடாதுன்னு, என் அம்மா என்ன கட்டிவச்சாங்க” மனம் திறந்து பேசிய கலா மாஸ்டர்!

cr 20220630en62bd6294bac75

தமிழ் தொலைக்காட்சி உலகில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்பவர் கலா மாஸ்டர். ஐந்து வயதிலேயே நடனப் பயணத்தைத் தொடங்கிய அவர், 12 வயதில் உதவி நடன இயக்குநராக தனது பணியை ஆரம்பித்தார். 26 வயதில் உலக அழகி (மிஸ் வேர்ல்ட்) போட்டிக்காக 320 நடனக் கலைஞர்களை ஒருங்கிணைத்து நடன அமைப்பை வடிவமைத்தார். தற்போது, தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடன இயக்குநர்களில் ஒருவராகவும், தமிழ் தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியின் உருவாக்குநராகவும் கலா மாஸ்டர் அறியப்படுகிறார்.


தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றி தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் கலா மாஸ்டர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள அவர், தனது கர்ப்பகாலத்தில் சந்தித்த அனுபவங்களை சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

a7c3d45785f56055dd54a6a6bf4d0244 1

அதில் பேசிய அவர், “எனக்கு 37 வயதில் தான் கர்ப்பம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் நடுவராக இருந்தேன். வயது காரணமாக இது தாமதமான கர்ப்பம் என்பதால், முழுமையான ஓய்வில் இருந்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், அதைப் பெரிதாக நினைக்காமல் வழக்கம்போலவே சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தேன்.

கர்ப்பமாக இருந்த காலத்திலும் ஓடுவதும், நடனமாடுவதும், படப்பிடிப்புகளுக்குச் செல்வதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது.என் அம்மா நான் வெளியே செல்லக் கூடாது என்பதற்காக என் காலில் கட்டுப் போட்டுக்கூட வீட்டில் உட்கார வைத்தார். ஆனால், நான் அதை அவிழ்த்துவிட்டு விஜய்யின் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டேன்.

எனக்கு சிறு வயதிலிருந்தே தைரியம் அதிகம். என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும், பயந்து வாய்ப்புகளை இழக்கக் கூடாது என்ற எண்ணம் எப்போதும் இருந்தது. வாழ்க்கையை மீண்டும் திரும்பிப் பார்க்க முடியாது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்ற வருத்தம் பின்னர் இருக்கக் கூடாது என்பதற்காக எந்த வேலையையும் தவிர்க்கவில்லை. காலையில் சென்னையில் ஒரு படப்பிடிப்பு, மதியம் விஜிபியில் மற்றொரு படப்பிடிப்பு என தொடர்ந்து வேலை செய்தேன்.

அந்த நேரத்திலும் டிரைவரை வைத்துக்கொள்ளாமல் நானே காரை ஓட்டிச் சென்று படப்பிடிப்புகளில் கலந்து கொள்வேன். அந்த பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவில்தான் என் மகன் பிறந்தான். அவன் என் வாழ்க்கையில் மிகப்பெரிய வரம். அவன் பிறந்த பிறகுதான் என் வாழ்க்கையும், எங்கள் குடும்பத்தின் வாழ்க்கையும் முழுமையாக நல்ல மாற்றத்தை கண்டது” என்று கலா மாஸ்டர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Also Read: பிரசவ வலியால் துடித்த பள்ளி மாணவி; விசாரணையில் சிக்கிய 7 கொடூரர்கள்..

Saranya

Next Post

கணவனைக் கட்டிலில் கட்டிவைத்து மனைவி செய்த காரியம்… அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்!

Thu Jul 9 , 2026
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள பர்சதேபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் திவாரி. குடிபழக்கத்திற்கு அடிமையான சஞ்சீவ் திவாரி, அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் குடியை நிறுத்துமாறு அவரது மனைவி அடிக்கடி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் சஞ்சீவ் திவாரி அதை பொருட்படுத்தவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே நாளுக்கு நாள் தகராறு அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில், வழக்கம் போல கடந்த சில நாட்களுக்கு […]
036e653fc9218d753ce2198abd24a3df468f7d25e33bd3b06ec40b1d6dd22223 1

You May Like