உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள பர்சதேபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் திவாரி. குடிபழக்கத்திற்கு அடிமையான சஞ்சீவ் திவாரி, அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் குடியை நிறுத்துமாறு அவரது மனைவி அடிக்கடி அறிவுறுத்தியுள்ளார். ஆனால் சஞ்சீவ் திவாரி அதை பொருட்படுத்தவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே நாளுக்கு நாள் தகராறு அதிகரித்து வந்துள்ளது.
இந்நிலையில், வழக்கம் போல கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோவம் அடைந்த சஞ்சீவ் திவாரியின் மனைவி, ஆத்திரத்தில் சஞ்சீவ் திவாரியை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து சென்று அங்கிருந்த கட்டிலில் கை கால்களை கட்டிப் போட்டுள்ளார். அதோடு விட்டுவிடாமால், சஞ்சீவ் திவாரியின் மனைவி அவரை தடியால் கொடூரமாகத் தாக்கி, வீட்டிலிருந்த மின்சார கம்பிகளை எடுத்து வந்து, கட்டிலில் கட்டப்பட்டிருந்த சஞ்சீவ் திவாரியின் உடலில் கரண்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்துள்ளார்.
இதனால் சஞ்சீவ் திவாரி எங்கும் தப்பித்து ஓட முடியாமல் இரவு முழுவதும் ஒரு அறைக்குள் அடைபட்டுக்கிடந்தார். மேலும், பலத்த காயம் அடைந்த அவர் வலியால் அழுது துடித்தார்.. இதையடுத்து, சஞ்சீவ் திவாரியின் அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவுங் காவல் நிலைய போலீசார், சஞ்சீவ் திவாரியை மீட்டு ஃபதேபூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கான்பூர் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு சஞ்சீவ் திவாரியின் உடல்நிலை ஓரளவுக்கு தேறிய நிலையில், சஞ்சீவ் திவாரியின் மனைவி குறித்து சஞ்சீவ் திவாரியின் தம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கணவனைக் கட்டிப்போட்டு கரண்ட் ஷாக் கொடுத்த மனைவியை கைது செய்துள்ளனர். அதிரடியாகக் கைது செய்தனர்.
Also Read: “நான் வெளியே போகக் கூடாதுன்னு, என் அம்மா என்ன கட்டிவச்சாங்க” மனம் திறந்து பேசிய கலா மாஸ்டர்



