fbpx

பெற்ற தாயை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன்…!

குழந்தைகள் எப்போதும் தெய்வத்திற்கு சமம் என்று சொல்வார்கள். ஆகவே அவர்களிடம் பொறுமையாக அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

அதை விடுத்து அவர்களிடம் வெறுப்புணர்வை உமிழ்ந்தால் நிச்சயமாக வரும் காலத்தில் அவர்கள் மனதளவில் பாதைக்கப்படுவார்கள், மேலும் சிறுவர்களின் வாழ்க்கையும் பாதிப்புக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் ராஜாக் இவர் ஒரு வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 11 வயது மகன் ஒருவர் இருக்கிறார். சென்ற திங்கள்கிழமை இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார்.

பின்பு ரமேஷின் மகனும் அவருடைய மனைவியும் மட்டுமே வீட்டில் இருந்தனர். அப்போது ரமேஷின் மகனை அவருடைய தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தன்னுடைய தந்தை உரிமத்துடன் வீட்டில் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து தாயை சுட்டு இருக்கிறான்.

இதன் பிறகு அந்த சிறுவனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரும் வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்வதில் அந்த பெண்மணி ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக கூறினர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் தெரிவிக்கும்போது 11 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மதுபானத்தை குடித்துவிட்டு தன்னுடைய தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறியிருக்கிறார்கள்.

அத்துடன் இது தொடர்பாக காவல்துறையிடம் அந்த சிறுவன் தெரிவித்ததாவது, தன்னுடைய தாய் தன்னிடம் அடிக்கடி சண்டை போடுகிறார், என்னை அடிக்கடி திட்டுகிறார், தன் மீது அன்பு காட்டுவதில்லை. எனவும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் தன்னை அடிக்கடி அடித்திருக்கிறார் இதன் காரணமாக, ஆத்திரத்தில் தன்னுடைய தாயை தானே சுட்டுக் கொன்றேன் என அந்த சிறுவன் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.

Next Post

#Breaking : பிப்.27-ல் தமிழகத்தில் இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

Wed Jan 18 , 2023
நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் முறையே, மார்ச் 12, மார்ச் 15, மார்ச் 22 ஆகிய தேதிகளில் நிறைவடைய உள்ளது.. இந்த 3 மாநிலங்களிலும் தலா 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.. இந்நிலையில் இந்த 3 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை […]

You May Like