fbpx

பெற்றோர்களே கவனம்!! 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 9 வயது சிறுவன் கூறிய அதிர்ச்சி காரணம்..

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கோந்த்வா பகுதியில் 9 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். சிறுவன், அருகில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறான். இவர்கள் தங்கி இருக்கும் வீட்டின் அருகில் உள்ள குடும்பத்தினருக்கு 3 வயது மகள் உள்ளார். இந்த 3 வயது சிறுமி, 9 வயது சிறுவனை அண்ணா என்று அழைத்து அவனுடன் பாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று, 3 வயது சிறுமி, சிறுவனுடன் தனியாக விளையாடியுள்ளார். இதையடுத்து, அந்த சிறுவன் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளான்.

தனக்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் இருந்த சிறுமி, தனது வீட்டிற்க்கு சென்ற பிறகு, தனக்கு நேர்ந்த கொடுமைகளை எல்லாம் தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த தாய், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, குழந்தைகள் உரிமைக்காக பணியாற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தில் அந்த சிறுமியை ஒப்படைத்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி, சிறுவன் என்ன செய்தான் என்பதை தெளிவாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த சிறுவனை சிறார் நீதி வாரியத்தில் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சிறுவன், சமூக வலைத்தளத்தில் பார்த்து தான், இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்த சிறுவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more: மகளுடன் உடலுறவு கொள்ள ஆசைப்பட்ட தந்தை; 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..

English Summary

3 year old baby faced sexual harassment by her neighbourhood kid

Next Post

கேமராவ ஆஃப் பண்ணுங்க.. பெண் செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோலி..!! - வைரலாகும் வீடியோ

Thu Dec 19 , 2024
Virat Kohli involved in heated exchange with media at Melbourne airport

You May Like