பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆனால் என்னதான் கடுமையான தண்டனை வழங்கினாலும் இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்கள் எப்போதும் திருந்துவதில்லை.
குஜராத் மாநிலம் நாடியாட் பகுதியில் தன்னுடைய மகளின் ஆபாச காணொளி ஒன்றை இணையதளத்தில் பரப்புவதை தட்டி கேட்ட எல்லை பாதுகாப்பு படை வீரரை அடித்து கொலை செய்தது குறித்து 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
எல்லை பாதுகாப்பு படை வீரர் மெல்ஜிபாய் வகேலா இவர் தன்னுடைய மகளின் ஆபாச காணொளியை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த 15 வயது சிறுவனிடம் அது தொடர்பாக விசாரணை செய்வதற்காக அவனுடைய கிராமமான சக்லாஸிக்கு சென்று இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனிடம் விசாரித்தபோது அது கைகாலத்தில் முடிவடைந்தது. இதனை அடுத்து அந்த சிறுவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வகையில், அவை மிக கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில் வகையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சக்லாசி காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை கைது செய்து இருக்கிறார்கள்.
இது தொடர்பாக நாடியாடின் துணை காவல்துறை கண்காணிப்பாளர் வி ஆர் பாஜ்பாய் தெரிவிக்கும்போது, வகாலே அவருடைய மகன் மற்றும் உறவினர்கள் குற்றம் சுமத்தப்பட்ட சிறுவனின் வீட்டிற்கு சென்று அந்த வீடியோ குறித்து விசாரித்து இருக்கிறார்கள். இதன் காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி, மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து சிறுமியின் தந்தை, மாமா மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பி எஸ் எப் வீரரை கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார் என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பி எஸ் எப் வீரரின் மனைவி வழங்கிய புகாரினடிப்படையில் சக்லாஸி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 7 பேரை கைது செய்திருக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கையில் கொலை செய்யப்பட்டவரின் மகளும், குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறுவனும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் அவர்களுக்கும் காதல் இருந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றுள்ளது.