fbpx

தொழில் கல்வி ஒத்துழைப்பை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்…! மத்திய அரசு தகவல்…!

வலுவான தொழில்-கல்வி ஒத்துழைப்பை உருவாக்கும் வகையில் , புதுவை பல்கலைக்கழகம், எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையம், புதுச்சேரி ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

மாணவர்களுக்குச் சான்றிதழ் படிப்புகள், தொழிற்சாலையில் சலுகைக் கட்டணத்தில் பயிற்சி வழங்குதல், ஆய்வகங்கள் மற்றும் நூலகத்திற்கு முழுமையான அணுகல் ஆகியவற்றை வழங்குவதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். மேலும், புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையத்தால் வழங்கப்படும் விடுதி வசதிகள், பரஸ்பர வளப் பகிர்வு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்முயற்சிகள் மற்றும் தொழில்-கல்வி தொடர்புகளை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மையத்தின் துணைப் பொது மேலாளர் அமித் நைன், “இந்த ஒத்துழைப்பு வெறும் காகித ஒப்பந்தம் அல்ல; இது நமது மாணவர்களின் எதிர்காலத்தை வளர்ப்பதற்கும், கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்துவதற்குமான ஓர் அர்ப்பணிப்பு என்றார்.

Vignesh

Next Post

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? திடீரென நிறுத்தி வைப்பு..? காரணம் என்ன..?

Thu Oct 12 , 2023
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டம் மூலம் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு தேவையான அரிசி முழு மானியத்திலும், பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை ஆகியவை குறைந்த விலையிலும் மக்களுக்கு அரசு வழங்கி வருகிறது. பொருளாதார அடிப்படையில் AAY, PHH, NPHH, NPHHS, NPHHN என 5 வகை குறியீடுகளுடன் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிதாக விண்ணப்பித்தோருக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வந்தது. குடும்ப அட்டையை தொலைத்தவர்களும் நகல் அட்டைக்கு […]

You May Like