உணவு டெலிவரி செய்வதற்காக ஸ்விக்கி ஊழியர் ஒருவர் குதிரையில் செல்லும் வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
மழைக்காலம் வந்தாலே போதும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டிராஃபிக் ஜாமிற்கு பஞ்சமே இருக்காது. மேலும், வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்வதற்குள் படாத பாடு பட வேண்டியிருக்கும். அதுவும் மழை நேரங்களில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் நிலையை சொல்லவா வேண்டும். மழை, டிராஃபிக் எல்லாவற்றையும் சமாளித்து முட்டி மோதி டெலிவரி செய்தால் சில கஸ்டமர்கள் அவர்களை திட்டவும் செய்வார்கள். ஆனால், இந்த மும்பை ஃபுட் டெலிவரி ஊழியர்களுக்கு அந்த கஷ்டங்கள் எதுவும் இருக்காது என்பது அண்மையில் வைரலான வீடியோ மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

வெறும் 5 நொடிகள் மட்டுமே கொண்ட அந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் மும்பை என தெரிகிறது. அதில், உணவு டெலிவரி செய்ய ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர் குதிரையில் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. just mubai things என கேப்ஷன் இடப்பட்டிருந்த இந்த வீடியோ just a vibe என்ற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த இணையவாசிகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க இந்த ஐடியாதான் சிறப்பானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு வருகிறார்கள்.