தொலைக்காட்சிகளில் ஒரு மெகா தொடர் ஒளிபரப்பாகிறது என்று சொன்னால் தாய்மார்கள் தங்களுடைய தலையில் இடியே விழுந்தாலும் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார்கள். அந்த அளவிற்கு தாய்மார்களின் வாழ்வோடு இந்த மெகா தொடர்கள் ஒன்றிப்போய்விட்டது.
ஆனால் இப்படிப்பட்ட மெகா தொடர்களை பார்த்து கட்டிய கணவனையே கொலை செய்யும் அளவிற்கு ஒரு பெண் துணிந்து இருக்கிறார். இப்படியான ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கின்ற கல்யாணப்பூர் சிபிலி பகுதியை சேர்ந்தவர் ரிஷப் திவாரி(29). இவருடைய மனைவியின் பெயர் சொப்னா. சொப்னாவுக்கும் ராஜு என்பவருக்கும் திருமணத்தை கடந்த தவறான உறவு இருந்திருக்கிறது.
மேலும் ரிசப் திவாரி மிகப்பெரிய பணக்காரர் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் சொப்னா தன்னுடைய கள்ளக்காதலனான ராஜுடன் சேர்ந்து ரிஷப் திவாரி சொத்துக்களை அபகரிக்க திட்டம் போட்டு இருக்கிறார். ஆகவே தன்னுடைய கணவரான ரிஷப் திவாரியை தீர்த்து கட்ட முடிவு செய்த சொப்னா, அவருடைய உணவில் கொஞ்சம், கொஞ்சமாக ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்து வந்திருக்கிறார்.
ஆனால் இதில் ரிஷப் திவாரிக்கு எதுவும் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை.இந்த நிலையில் தான் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி தன்னுடைய நண்பர் மனிஷ் உடன் சகர்பூரில் நடந்த ஒரு திருமணத்திற்காக சென்றிருந்தார் திவாரி.
அந்த திருமணம் முடிவடைந்த பிறகு இருசக்கர வாகனத்தில் தன்னுடைய வீட்டிற்கு திவாரி திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை யாரோ ஒரு மர்ம நபர் திடீரென்று தாக்கியுள்ளார். அவர் யார் என்று திவாரியால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த திவாரி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அதன் பிறகு அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் இருந்தாலும் தீவிர சிகிச்சையின் காரணமாக, அவர் உயிர் பிழைத்தார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சென்ற 1ம் தேதி தீபாவளி வீட்டுக்கு வந்தார். அதன் பிறகு 2 நாள் சென்ற பின்னர் அதாவது கடந்த 3ம் தேதி மீண்டும் திவாரிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் அவருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
ஆனால் சென்ற முறை நடைபெற்ற விபத்திலிருந்து பிழைத்த அவர் இந்த முறை பிழைக்க முடியவில்லை. பரிதாபமாக உயிரிழந்து விட்டார், இதனைத் தொடர்ந்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினரும் திவாரி இறப்பு தொடர்பாக விசாரணையை ஆரம்பித்தனர். அந்த விசாரணையில் வெளியான தகவலை கேட்டு காவல்துறையினரே ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போய்விட்டார்கள்.
அவர் தாக்கப்பட்ட அதே நாளில் அதே பகுதியில் கைப்பேசி எண்களை ஆராய்ந்து பார்த்தனர். காவல்துறையினர் அப்போது சந்தேகத்திற்கு இடமான கைபேசி அழைப்புகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் தாக்குதல் நடத்தப்பட்ட அந்த பகுதியில் இருந்து சொப்னாவின் கள்ளக்காதலன் ராஜு பல அழைப்புகளை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.
அந்த கால்களை அவர் யாருக்கு செய்தார் என்று காவல்துறையினர் தன்னுடைய அடுத்த விசாரணையை ஆரம்பித்தனர். அனைத்து கால்களும் தீவாரியின் மனைவி சொப்பனாவுக்கு வந்திருப்பதை இதன் மூலமாக காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதன் பிறகு சொப்னாவிற்கு வந்த ஃபோன் கால்களை காவல்துறையினர் ஆய்வு செய்த சமயத்தில் ராஜுவுக்கும், சொப்னாவுக்கும் இடையிலான கள்ளக்காதல் வெளிச்சத்திற்கு வந்தது.
உயிரிழந்த திவாரி பணக்காரர் என்ற காரணத்திற்காகவே இந்த கள்ளக்காதல் ஜோடி திட்டமிட்டு அவரை கொலை செய்து விட்டு, அவருடைய சொத்துக்களை அபகரிக்க முடிவு செய்திருக்கிறது என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
ஆனால் சொப்னா திவாரிக்கு வழங்கிய பாலில் ஏதேதோ கலந்து கொடுத்தும் அவருக்கு எதுவும் நடைபெறவில்லை என்பதால் அவரை கொலை செய்வதற்கு ஒரு கூலிப்படையை தயார் செய்து இருக்கிறார் சொப்னா, இதற்காக நியமனம் செய்யப்பட்டவர் தான் சிட்டு.
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி திவாரி மீது தாக்குதல் நடத்தியது இவர்தான். ஆனால் திவாரி அதிலிருந்து தப்பித்து விட்டார். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த தன்னுடைய கணவரை பார்த்தவுடன் சொப்னா ஒரு கணம் அதிர்ந்து போய் உள்ளார். ஆகவே அவரை கொலை செய்ய தன்னுடைய அடுத்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கி விட்டார் என்று சொல்லப்படுகிறது.
அதாவது மருந்தகத்திற்கு சென்று நிறைய தூக்க மாத்திரைகளை வாங்கி வந்திருக்கிறார் திவாரி சிகிச்சையிலிருந்து தற்போது தான் மீண்டு வந்திருக்கிறார் என்பதால் நோயாளி என்பதை தெரிவித்து தூக்க மாத்திரைகளை கேட்டு வாங்கி இருக்கிறார். அப்படி வாங்கி வந்த தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து திவாரிக்கு வழங்கியுள்ளார் சொப்னா.
ஒருவேளை இந்த முயற்சியிலும் அவர் உயிரிழக்கவில்லை என்றால் வேறு ஒரு திட்டத்தையும் யோசித்து வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் எப்படி கொலை செய்யலாம் என்பதற்காகவே பல க்ரைம் மெகா தொடர்களை அவர் பார்த்து வந்திருக்கிறார் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில் திவாரியை திட்டமிட்டு கொலை செய்த அவருடைய மனைவி சொப்னா சிட்டு , ராஜூப்தா உள்ளிட்ட மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.