Tn Govt App: மருத்துவ காப்பீட்டு திட்டம் வேண்டுமா…? தமிழக அரசு அறிமுகம் செய்த சூப்பர் செயலி…!

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பில் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (TNPFTS), களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு (TNPFTS), அரசு பொது நிதி நடைமுறையை எளிமைப்படுத்துதல், கருவூலத்தில் இருந்து கடைசி பயனர் வரை நிதி சென்று சேர்வதைக் கண்காணித்தல், அரசு செலவினத்தை முறைப்படுத்துதல், சிறந்த நிதி கண்காணிப்பு செயலி மூலம் திட்டங்களை தீட்டுதல், அரசின் கடனைக் குறைத்தல் என்ற வகையில் தமிழ்நாடு பொது நிதி மேலாண்மை அமைப்பு துவக்கி வைக்கப்பட்டது.

களஞ்சியம் இணைய முகப்பு மற்றும் கைபேசி செயலி, தமிழ்நாடு அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை வாயிலாக அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான சுயசேவைகளை நேரம் மற்றும் இருப்பிடம் சாராமல் பயன்படுத்தும் வகையில் கைபேசி செயலி துவக்கி வைக்கப்பட்டது. புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு வலைத்தளம் (Website) மற்றும் கைபேசி செயலி (Mobile App) அரசு ஊழியர்கள். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் (NHIS/PNHIS) சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், சிகிச்சைகளின் விவர பட்டியல்கள். மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்யும் வசதிகள் மற்றும் பல விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி துவக்கி வைக்கப்பட்டது.

கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (IFHRMS) தொடர்பான பயிற்சிகள் வழங்கிடவும், நிதித்துறையின் கீழ் இயங்கும் துறை தலைமைகளின் பயன்பாட்டிற்கும் மற்றும் பொதுவான செயல்பாடுகளுக்காகவும் ரூ.16.11 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சி கூடம் மற்றும் ரூ. 9.85 இலட்சம் மதிப்பீட்டில் நூலகம் திறக்கப்பட்டது.

English Summary : Need a medical insurance plan…? A app introduced by the Tamil Nadu government

Vignesh

Next Post

School: வந்தது உத்தரவு...! 5 வயது நிரம்பிய அனைத்து மாணவர்களையும் முதல் வகுப்பில் சேர்த்தல் வேண்டும்...!

Thu Feb 29 , 2024
ஐந்து வயது நிரம்பிய அனைத்து மாணவர்களையும் முதல் வகுப்பில் சேர்த்தல் வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் பிற முன்னெடுப்புகளான தற்காப்பு கலைப் பயிற்சி […]

You May Like