ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வருகின்ற 7ஆம் தேதி இந்திய அணி விளையாட உள்ள நிலையில் டெஸ்ட் , ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தனி தனி புதிய சீருடையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் புதிய கிட்- ஸ்பான்சர் அடிடாஸ் நிறுவனம் இந்தி புதிய சீருடையை வடிவமைத்துள்ளது. அடுத்து 5 வருடங்கள் அடிடாஸ்தான் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் அமைக்கும் என தெரிகிறது. இதற்காக 350 கோடி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய சீருடைகளை அடிடாசின் இணையதளத்தில் (https://adidas.co.in/Indian_cricket_team) நாளை காலை 10 மணி முதல் ரசிகர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
ஒரு நாள், டி20, டெஸ்ட் போட்டிக்கான ஜெர்ஸியின் விலை 4,999. ஒரு நாள் போட்டிக்கான ரசிகர்கள் ஜெர்ஸியின் விலை 999. ஆடவர், மகளிர் இருவருக்குமான ஒருநாள், டி20, டெஸ்ட் அணிக்கான ஜெர்சிகளை ரசிகர்கள் வாங்கிக் கொள்ளலாம். லேசான நீல கலரில் இருப்பது ஒரு நாள் போட்டிக்கானது அடர் நீல நிறத்தில் இருப்பது டி20 க்கானது. வெள்ளை நிறம் டெஸ்ட் போட்டிக்கானது இந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி உலகக் கோப்பை கோட்டைகள் என அடுத்தடுத்து சர்வதேச தொடர்கள் விளையாட உள்ள நிலையில் புதிய சீருடை அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளது