புதிய GST வரி விகிதம்… விவசாயிகளுக்கு அதிக அளவில் பயன்…! மத்திய அமைச்சர் தகவல்…!

shivaraj 2025

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள், வேளாண் துறையில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், வேளாண் உபகரணங்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பதால், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் லாபங்கள் அதிகரித்து, அவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் மத்திய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


போபாலில் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், உயிரி- பூச்சிக்கொல்லிகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் முதலியவற்றின் மீதான வரிகள் குறைக்கப்பட்டிருப்பது, விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றும், ரசாயன உரங்களிலிருந்து இயற்கை உரங்களுக்கு ஏராளமான விவசாயிகள் மாறுவார்கள். பால்வளத் துறையைப் பொறுத்தவரை, பால் மற்றும் பாலாடைக் கட்டிக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், சாமானிய மக்கள், கால்நடை பராமரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் அதிகளவில் ஈடுபடும் கைவினைப் பொருட்கள், தோல் மற்றும் பால் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதன் வாயிலாக அவர்களின் வருமானம் பெருகுவதுடன், லட்சாதிபதி சகோதரிகளாக அவர்களது நிலை மேலும் வலுவடையும். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் என்றும், ஒருங்கிணைந்த வேளாண்மையை நோக்கி நாடு முன்னேறுகிறது. வேளாண் விளைப் பொருட்களின் வளர்ச்சியுடன், இந்தப் பணியில் ஈடுபடும் விவசாயிகளும் எழுச்சி பெறுவார்கள் என்று சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டார்.

Vignesh

Next Post

உஷார்!. இந்தியாவில் ஆரோக்கியமற்ற பொருட்களில் தயாரிக்கப்படும் பீட்சா!. இத்தாலிய பீட்சா தான் பெஸ்ட்!. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?.

Mon Sep 8 , 2025
இந்தியாவில் பீட்சா சாப்பிடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மருத்துவர்கள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரும் குழந்தைகள் பீட்சா சாப்பிடுவதைத் தடை செய்கிறார்கள். ஏனென்றால் இந்திய பீட்சா ஆரோக்கியமற்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மறுபுறம், இத்தாலிய பீட்சாவிற்கு ஆரோக்கியமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தாலிய பீட்சா ஏன் இந்திய பீட்சாவை விட ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம். இத்தாலிய பீட்சாவில் என்ன மாவு பயன்படுத்தப்படுகிறது? இத்தாலிய பீட்சாவில் மல்டிகிரெய்ன் மாவு பயன்படுத்தப்படுகிறது. […]
pizza

You May Like