காவல்துறையில் ஊடகங்களை சந்திப்பதற்காக, புதிதாக ஊடகத் செய்தி தொடர்பு அதிகாரி என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகத் தொடர்பு அதிகாரியாக முத்தரசி ஐபிஎஸ் நியமனம்.
தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியும், இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு காவல்துறையில் புதியதாக உருவாக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் பதவிக்கு பெண் ஐபிஎஸ் அதிகாரியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உத்தரவில், சென்னை குற்ற ஆவண காப்பகப் பிரிவு ஐஜி வி.ஜெயஸ்ரீ, சென்னை ஊர்க்காவல் படை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்பப் பிரிவு ஐஜி அவினாஷ் குமாருக்கு, குற்ற ஆவண காப்பக ஐஜி பொறுப்பு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை சட்டம், ஒழுங்கு உதவி ஐஜி ஜெ.முத்தரசி, சென்னை செய்தி மக்கள் தொடர்பு எஸ்.பி.யாக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் புதியதாக உருவாக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் பதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் சி.சங்கு, செங்குன்றம் போக்குவரத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி காவலர் பயிற்சி பள்ளி எஸ்.பி. கே.மகேஸ்வரி, சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



