எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதன்பின்னர் இதில் சம்பந்தப்பட்ட பலரும் கொலை செய்யப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.. 8 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை..
சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 என்று கூறியிருந்தார்.. இதனால் கோடநாடு வழக்கு பற்றிய விவாதம் மீண்டும் கிளம்பி உள்ளது..
இதுகுறித்து நேற்று டிடிவி தினகரனும் பேசியிருந்தார்.. கோடநாடு பங்களாவில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்கள் ஃபைல்களை தேடி உள்ளனர்.. ஆனால் அந்த ஃபைல்களை நாங்கள் போயஸ் கார்டனிலேயே எரித்துவிட்டோம்..” என்று கூறியிருந்தார்..
இன்று செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து இதுவரை குரல் கொடுக்கப்படவில்லை.. எல்லாவற்றுக்கும் சிபிஐ கேட்கும் அதிமுக ஏன் இந்த சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கேட்கவில்லை.. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை வைத்து திமுகவின் பி டீம் ஆக இருப்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.. நான்கரை ஆண்டுகள் ஆட்சியை நடத்த உதவிய பாஜகவிற்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்..” என்று கூறினார்..
இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடப்ராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சிபிஐயை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி செங்கோட்டையன் விரைவில் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி உள்ளார்.. எனவே கோடநாடு வழக்கு தொடர்பாக விரைவில் செங்கோட்டையன் மனு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது..
இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய நெருக்கடியாக மாறும் என்றே கூறப்படுகிறது.. பாஜக தான் அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னது என்று செங்கோட்டையன் இன்று வெளிப்படையாகவே கூறிவிட்ட நிலையில் அவருக்கு பாஜக ஆதரவு இருப்பது உறுதியாகி உள்ளது..
செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதம் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைத்தார்.. குறிப்பாக இரட்டை இலை சின்னம் குறித்தும் அவர் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உள்ளார்.. தேர்தல் ஆணையம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.. ஒருவேளை செங்கோட்டையன் தரப்பு தான் உண்மையான அதிமுக என்றும், அவருக்கு தான் இரட்டை இலை சின்னம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டால்.. அவ்வளவு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிடும்..
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவை ஒன்றிணைக்கவில்லை எனில் இபிஎஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்றும் அதிமுகவின் பொதுச்செயலாளராக செங்கோட்டையனை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது..
செங்கோட்டையன் தலைமையின் கீழ் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என பிரிந்தவர்கள் அனைவரையும் சேர்த்துக் கொண்டு ஒருங்கிணைந்த அதிமுகவாக மாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இதன் மூலம் தமிழகத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என்று பாஜக கணக்கு போடுகிறதாம்.. ஆனால் இபிஎஸ் இதை எப்படி சமாளிக்கப் போகிறார்? பாஜகவின் திட்டம் நிறைவேறுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..



