அடுத்த புயல்… மியான்மர் கடலோரப் பகுதிகளில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…!

cyclone rain

தமிழகத்தில் இன்று முதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மியான்மர் கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் மற்றும் வங்கதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 4-ம் தேதி வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 5, 6 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் 6-ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பாஜகவுடன் கூட்டணி வைத்த நாள் முதல் அதிமுகவுக்கு பின்னடைவு...!

Mon Nov 3 , 2025
பாஜகவுடன் கூட்டணி வைத்த நாள் முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; வாக்காளர் பட்டியலில் சரி பார்ப்பது தவறில்லை. கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களை நீக்க வேண்டும். எந்த விசாரணையும் இன்றி சிலரை சேர்க்க வேண்டும் என்ற குற்றச்சாட்டும் வருகிறது. யார் பெயரை நீக்கினாலும் அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வேலைக்கு என […]
karti chidambaram 2025

You May Like