லாரி பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கானோ மாகாணம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து 23 பயணிகளுடன் ஜாரியாவில் இருந்து புறப்பட்ட நிலையில் கானோ நோக்கி சென்றது.
இந்நிலையில் பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அதே சாலையில் எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் படுகாயங்களுடன் உயிர்த்தப்பினர். போக்குவரத்து விதிகளை மீறி வா்த்தக வாகன ஓட்டுநா் எதிா் திசையில் வாகனத்தை இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த தகவல் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நைஜீரியாவின் முக்கிய சாலைகளில் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த 2024-ஆம் ஆண்டு மட்டும் 9,570 விபத்துகளில் 5,421 போ் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Read more: சட்டவிரோத பண பரிமாற்றம்: பிரபல தமிழ் நடிகை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!!