திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், தனது அரசியல் நுழைவு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அவர் கூறியிருந்தார்.. இந்த நிலையில் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து மக்கள் முடிவு செய்து சொல்லட்டும், மக்கள் சொன்னால் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார்..
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் இன்று மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் பேசிய அவர் “ இத்தனை ஆண்டுகளுக்கு பின் விஜய் சார் வந்ததால் என் அம்மா அரசியலுக்கு போக வேண்டும் என்று அனுமதி வழங்கினார்.. ஆனால் இந்த சர்ச்சை ஆரம்பித்த உடன் அரசியல் வேண்டாம் என்று அம்மா கூறிவிட்டார். வருவது என்றால் வர வேண்டியது தானே? என்று கேட்கிறார்கள்.. என்னை வாழ வைத்தவர்கள் என்பதால் அரசியலுக்கு வருவது குறித்து மக்களின் கருத்தை கேட்டேன்.
எல்லோரும் அரசியலுக்கு வந்த பின்னர் அதை செய்வேன் இதை செய்வேன் என்று கூறுகின்றனர்.. ஆனால் பலரின் வாழ்க்கையை மாற்றி உள்ளேன்.. அது ரொம்ப கஷ்டம்..ஆசைக்காக அரசியலுக்கு வர மாட்டேன், மக்களுக்காக தான் அரசியலுக்கு வருவேன்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் நான் போடுவேன் என்று பலரும் என்ன்னிடம் சொன்னார்கள்.. திருச்சி கிழக்கு தொகுதியில் நான் வந்து போட்டியிட வேண்டுமா? விஜய் நடிக்க ஆரம்பித்த உடன் அவருக்காக போஸ்டர் ஒட்டி கட்சியில் ஆரம்பித்து முதல் உழைத்தவர்கள் வர வேண்டுமா..? நான் சேர்ந்த உடன் சீட் கிடைத்துவிட்டால், அந்த கட்சிக்காக உழைத்தவர்களின் நிலை என்னவாகும்..?
முதல்வர் விஜய்யிடம் குழந்தைகளுக்காக உதவ வேண்டும் என்று உரிமையோடு கேட்பேன்.. அப்போது பெருமையாக சொல்லிக்கொள்வேன்.. திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிட மாட்டேன். திருச்சி கிழக்கில் போட்டியிட மாட்டேன் எனில் நான் அரசியலுக்கு வரவில்லை என நினைக்க வேண்டாம். திருச்சி கிழக்கு தொகுதியில் நிற்க மாட்டேன் என்று சொன்னேன்.. வேறு எந்த தொகுதியிலும் நிற்க மாட்டேன் என்று சொல்லவில்லை.. எங்கு சேர்ந்தால் மரியாதை கிடைக்குமோ, யாருடன் சேர்ந்தால் மக்களுக்கு நல்லது நடக்குமோ எல்லாவற்றையும் யோசித்து நல்ல முடிவெடுப்பேன்.. என் சுயநலத்திற்காக எம்.எல்.ஏ பதவி, அமைச்சர் பதவிக்காக நான் அரசியலுக்கு வர மாட்டேன்..
மக்களுக்காக தான் மக்கள் பிரச்சனைகளுக்காக அரசியலுக்கு வருவது தான் நல்ல விஷயமாக இருக்கும்.. எப்படிப்பட்ட அரசியலை கையில் எடுத்தால் மக்கள் விரும்புவார்கள் என்பதை சிந்தித்து, நான் என் முடிவை உங்களிடம் சொல்கிறேன்.. கையில் 2 படங்கள் உள்ளது.. அந்த வேலைகள் முடிந்த உடன், எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்கிறேன்..” என்று தெரிவித்தார்..
Read More : மோடி அமைச்சரவை மாற்றம் : புதிய முகங்கள் இடம்பெற வாய்ப்பு..! உத்தேச பட்டியல் இதோ..!



