இன்று மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது இன்று வட தமிழகம் – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது, வடக்கு – வட மேற்கு திசையில் இன்று நகர்ந்து செல்லக்கூடும்.தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை காரணமாக நேற்று காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி,தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை,செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று காலையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இன்று மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.



