தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை…! இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை…?

rain1

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி – காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேச பகுதிகளில் தொடங்கக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 19-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். வரும் 18 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். மேலும் வரும் 24 ஆம் தேதி வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இவை மேலும் வலுவடையலாம்.

இன்று விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், 20 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 20 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான – கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இன்று இந்த தவறை மட்டும் வீட்டில் பண்ணிடாதீங்க..!! மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாகாதீங்க..!!

Fri Oct 17 , 2025
ஆன்மீக ரீதியாக வெள்ளிக்கிழமை என்பது செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் குறிப்பிட்ட செயல்களைச் செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் மனம் மகிழ்ந்து, வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதேபோல், இந்நாளில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களைத் தவறுதலாகச் செய்தால், மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மிக நடைமுறைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். வெள்ளிக்கிழமையில் செய்ய […]
Magalashmi 2025

You May Like