நவம்பர் 2025 தொடங்க உள்ள நிலையில், இன்று உங்கள் பணத்திற்கும் செலவுகளுக்கும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் பல நிதி விதிகள் அமலுக்கு வருகின்றன. வங்கி நாமினி விதிமுறைகள், ஆதார் அப்டேட் கட்டணங்கள், ஜிஎஸ்டி (GST) புதிய தளங்கள், ஓய்வூதிய விதிகள், கார்டு கட்டணங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். நவம்பர் 1 முதல் என்னென்ன விதிகளில் மாற்றம் வரப்போகிறது என்று பார்க்கலாம்..
வங்கி நாமினி விதிகளில் மாற்றம்
நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, நவம்பர் 1 முதல் வங்கி சட்ட திருத்தம் அமலுக்கு வருகிறது. ஒரு வங்கிக் கணக்கில் இப்போது அதிகபட்சம் நான்கு நாமினிகளை (nominees) ஒரே நேரத்தில் சேர்க்கலாம். ஒவ்வொருவருக்கும் பங்கீடு சதவீதத்தையும் (share/percentage) குறிப்பிடலாம். “Successive nomination” என்ற வகையிலும் சேர்க்கலாம்.. அதாவது, முதல் நாமினி மறைந்தால் அடுத்த நாமினி உரிமை பெறுவார். வாடிக்கையாளர் நாமினியை சேர்க்க மறுத்தாலும், வங்கிகள் கணக்கை திறக்கத் தடை செய்ய முடியாது.
ஆதார் அப்டேட் கட்டணங்களில் மாற்றம்
UIDAI (Unique Identification Authority of India) வெளியிட்ட அறிவிப்பின் படி குழந்தைகளுக்கான அடையாள (biometric) அப்டேட் கட்டணம் ரூ. 125 தற்போது ஒரு வருடத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கு: பெயர், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் மாற்றம் – ₹75
கைரேகை, கண்புள்ளி (iris) அப்டேட் – ₹125
மேலும், இப்போது ஆவணங்கள் (documents) இல்லாமலேயே ஆன்லைனில் ஆதார் விவரங்களை புதுப்பிக்கலாம்.
ஓய்வூதியம் பெறும் விதிமுறைகள்
மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வுபெற்ற ஊழியர்கள் நவம்பர் மாத இறுதிக்குள் “Life Certificate” சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்காதால் ஓய்வூதியம் தாமதமாகவோ அல்லது நிறுத்தப்படவோ வாய்ப்பு உள்ளது. அதேபோல், NPS (National Pension System)-ல் இருந்து UPS (Unified Pension Scheme)-க்கு மாற விரும்புவோர் நவம்பர் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
புதிய GST அடுக்குகள்
நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, நவம்பர் 1 முதல் GST அடுக்குகள் (slabs) மாற்றம் பெறுகின்றன. தற்போதைய 4 தளங்கள் (5%, 12%, 18%, 28%) குறைக்கப்பட்டு
2 தளங்கள் + சிறப்பு விகிதம் என மாற்றப்படுகிறது. 12% மற்றும் 28% அடுக்குகள்நீக்கப்பட்டு, பொலிவுப் பொருட்கள் மற்றும் பாவப் பொருட்களுக்கு (sin goods) 40% சிறப்பு அடுக்குஅமலாகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் லாக்கர் வாடகை குறைப்பு
PNB வங்கி, லாக்கர் வாடகையை அளவு மற்றும் வகைக்கு ஏற்ப முழு இந்திய அளவில் குறைக்க உள்ளது. புதிய விகிதங்கள் நவம்பர் மாதத்தில் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்படும்; அறிவிப்பு பிறகு 30 நாட்களில் அமலில் வரும்.
SBI கார்டு புதிய கட்டண விதிகள்
நவம்பர் 1 முதல், SBI கார்டு வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டியது:
மூன்றாம் தரப்பு ஆப்கள் (MobiKwik, CRED) மூலம் கல்வி கட்டணங்களை செலுத்தும்போது 1% சேவை கட்டணம் விதிக்கப்படும். மேலும், ரூ.1,000-ஐ கடந்த வாலட் (wallet) லோடு பரிவர்த்தனைகளுக்கும் 1% கட்டணம் விதிக்கப்படும்.
மொத்தத்தில், நவம்பர் 2025-ல் பல முக்கிய நிதி விதிகள் மாறுகின்றன.. வங்கிக் கணக்கு, ஆதார் அப்டேட், GST, கார்டு பரிவர்த்தனை, ஓய்வூதியம் ஆகியவற்றில் மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்து செயல்பட்டால், அவசியமில்லாத செலவுகளையும் சிக்கல்களையும் தவிர்க்கலாம்.
Read More : OTP இல்லை, அலர்ட் இல்லை; ஆனா ரூ.90,900 காலி.. சில நிமிடங்களில் பணத்தை இழந்த பெங்களூரு பெண்.. என்ன நடந்தது?



