”இனி உங்களுக்கு இவ்ளோ தான் சம்பளம்”..!! அடுத்த அதிர்ச்சி கொடுத்த விப்ரோ நிறுவனம்..!! கலக்கத்தில் ஊழியர்கள்..!!

புதிதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவிகிதம் வரை விப்ரோ நிறுவனம் குறைத்துள்ளது.

கொரோனா தொற்று சமயத்தில் அதிகப்படியான ஆட்களை வேலைக்கு எடுத்த தொழில்நுட்ப நிறுவனங்கள், தற்போது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன. கூகுள், மெட்டா, அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் என பல முன்னணி நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை கொத்து கொத்தாக பணியில் இருந்து நீக்கி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, ஏற்கனவே ஆட்குறைப்பு செய்த நிலையில், தற்போது ஊழியர்களின் சம்பளத்திலும் கைவைத்துள்ளது. அதன்படி, புதிதாக பணிக்கு சேருபவர்களின் ஊதியத்தில் 50% வரை குறைக்கப்படும் என அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பயிற்சிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த புதிய ஊழியர்களுக்கு ரூ.6.5 லட்சம் வருடாந்திர சம்பளமாக நிர்ணயித்திருந்தது. ஆனால், தற்சமயம் பொருளாதார நெருக்கடியால் புதிய ஊழியர்களுக்கு ரூ.3.5 லட்சம் மட்டும் வருடாந்திர சம்பளமாக கொடுக்கப்படும் எனவும், இந்த ஆஃபரை புதிய ஊழியர்கள் ஏற்றக் கொண்டால், அவர்கள் மார்ச் மாதம் முதல் ஆன்போர்டு செய்யப்படுவார்கள் என விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்டு விப்ரோ ஊழியர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஐடி ஊழியர்களின் பணி பாதுகாப்பு ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், சம்பளக் குறைப்பை எதிர்த்து சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.

Chella

Next Post

உலகில் மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகள்.. 4-வது இடத்தில் இந்தியா.. முதலிடத்தில் எந்த நாடு..?

Wed Feb 22 , 2023
உலகிலேயே மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது.. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வேகமாக வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நாட்டில் சாலை விபத்துகளும் அதிகரித்து வரும் நிலையில், மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.. ஒரு காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட தரவரிசை பட்டியலின்படி, மோசமான ஓட்டுனர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அந்நிறுவனம் 50 நாடுகளைச் சேர்ந்த […]

You May Like