OPS | அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த ஓபிஎஸுக்கு தடை..!! ஐகோர்ட் தீர்ப்பால் குஷியில் எடப்பாடி..!!

அதிமுக சின்னம் மற்றும் கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதிமுக இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஓ.பி.எஸ். தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸுக்கு இடைக்கால தடை விதத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இடைக்கால தடைக்காலம் முடிந்த நிலையில், தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஓபிஎஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி வழக்கில் இரு தரப்பு இறுதி வாதங்களை கேட்டறிந்தார். இரு தரப்பு வாதங்களும் மார்ச் 12 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது ஓபிஎஸுக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுக கொடி, சின்ன, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த வித்திக்கப்பட்ட தடையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். படிவம் ஏ மற்றும் படிவம் பி யில் கையெழுத்திட அதிகாரம் வழங்க வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்திற்கான பதிலை தற்போது வரை தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : Crime | ”என் மனைவியுடன் தொடர்பா”..? நண்பனின் கை, கால்களை கட்டிப் போட்டு கொடூர தாக்குதல்..!!

Chella

Next Post

தேர்தல் ஆணையம் அதிரடி..! 6 மாநில உள்துறை செயலாளர்கள் மாற்றம்..! மேற்கு வங்க டிஜிபி பதவி நீக்கமா..?

Mon Mar 18 , 2024
இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய, மாநில அரசு அலுவல கங்களில் பிரதமர், முதல்வர், […]

You May Like