4 MLA-க்களுடன் விஜய்க்கு தூது விட்ட ஓபிஎஸ் தரப்பு.. தவெக சொன்ன பதில்..! ஸ்டாலின் பக்கம் சாய்வதன் பின்னணி..?

stalin vijay ops

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்தனர். அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜக கூட்டணியில் தனி சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும் தோல்வி அடைந்தார்.


இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து தேசிய ஜன நாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் தரப்பு, தவெகவுடன் இணைய நிறைய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே ஒபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகிய 4 எம்.எல்.ஏக்களும் உங்களுக்கே ஆதரவு தருகிறோம் என தவெகவுக்கு தூது விட்டுள்ளது.

ஆனால் ஜனவரியில் சொல்கிறோம் என ஒரே வரியில் தவெக தரப்பில் பதில் வந்துள்ளதாம். 3 முறை முதலமைச்சராக இருந்த நீங்கள் நேற்று வந்த விஜய்க்காக மேடை ஏறி பேசுவதா? என அவரது ஆதரவாளர்கள் கேட்க, அதன் பிறகே ஸ்டாலின் பக்கம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more: சிக்கன் முட்டை விலை கிடுகிடு சரிவு.. அசைவ பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!

English Summary

OPS sent a delegation to Vijay with 4 MLAs.. TVK response..! Why are you leaning towards Stalin..?

Next Post

3 பேர் பலி.. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் இராணுவ தளங்கள் குறிவைத்து உக்ரைன் அதிரடி தாக்குதல்..!!

Sun Aug 3 , 2025
3 killed in Ukrainian drone strikes on Russian oil refinery, military sites
ukrain russia 1

You May Like