2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது..
இந்த நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் தலைவர்களின் சந்திப்பு உற்று நோக்கப்படுகிறது.. இதையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிமுக – பாஜக கூட்டணி தொடங்கிவிட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.. அப்போது “ அதிமுக பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி இருக்கிறார்.. அதற்காக அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.. “ என்று கூறினார்..
டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டு வருவது பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு அதை பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை.. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று கூறினார்.. பாமக, தேமுதிக கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்தபடி நன்றி கூறி விட்டு சென்றார்..



