தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜூன் 26) முதல் ஜூலை 1-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு […]
தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜூலை 10 முதல் 17-ம் தேதி வரை தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) குறிப்பிடப்பட்டுள்ள […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், மின்சார விமானங்கள் குறைந்த விலையில் விமானப் பயண வசதியைப் பெறும் என்ற புதிய நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். உலகளவில் நிகழும் பதற்றங்கள் காரணமாக இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன. இந்தநிலையில், பயணிகள் மலிவு விலை மற்றும் நிலையான பயண விருப்பங்களைத் தேடுகிறார்கள். இதுபோன்ற […]
தேர்வு செய்யப்பட்ட 2346 ஆசிரியர்கள் குற்ற பின்னணி குறித்து ஆய்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தகுதி பெற்றவர்களில் மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் 2,346 பேர் கொண்ட தற்காலிக தேர்வுப் பட்டியல் பெறப்பட்டுள்ளது. […]
காபி குடிப்பதால் ஏராளமான உடல்நல நன்மைகள் இருந்தாலும், சில ஆபத்தான தீமைகளும் உள்ளன. சமீபத்திய ஆய்வின்படி, உடனடி காபி பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இன்ஸ்டன்ட் காபி குடிப்பதால், பார்வை தொடர்பான ஒரு கடுமையான நோயான வயதுசார் மாகுலர் சிதைவு (Age-related Macular Degeneration – AMD) ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என சீனாவின் ஹூபே மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வு எச்சரிக்கிறது. […]
சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் இன்று காலை 11.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சல்துறையின் பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட அளவிலான குறைதீர்ப்பு மன்றத் தலைவர் விசாரிப்பார். இந்தக் கோட்டத்திற்கு உட்பட்ட தங்கள் புகார்களை வாடிக்கையாளர்கள் சென்னை நகர மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளருக்கு 18.06.2025 […]
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி – வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் 6 முதல் 9-ம் […]
7 கோடி PF குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில், PF உறுப்பினர்களுக்கு EPFO விரைவில் ஒரு நல்ல செய்தியை அறிவிக்க உள்ளது. PF உறுப்பினர்கள் தற்போது PF பணத்தை எடுப்பது மிகவும் எளிதாக மாறும். உங்கள் PF கணக்கின் ஒரு பகுதியை நீங்கள் கோரிக்கை விடுக்காமலே பயன்படுத்த முடியும். தற்போதைய சூழ்நிலையில், PF தொகை கோரப்பட்ட 10 முதல் 15 நாட்களுக்குள் பெறப்படும், ஆனால் EPFO அமைப்பு இதில் விரைவில் புதிய […]
தேன் போல மனதை வருடும் தேநீர், வெறும் ஒரு சூடான பானமாக மட்டுமல்ல; அது ஒரு கலாச்சாரம், ஒரு கலை, சில சமயங்களில் மிகுந்த ஆடம்பரத்தின் திருவிழாவாகவும் கருதப்படுகிறது. உலகில் உள்ள சில தேநீர்கள், அவற்றின் மணமும் சுவையும் மட்டுமல்லாது, அவற்றைச் சுற்றியுள்ள வரலாற்றுச் செய்திகளாலும், மரபுகளாலும் புகழ்பெற்றுள்ளன. பாண்டா உரமிடப்பட்ட தோட்டங்கள் முதல் வரலாற்று மலைத் தோட்டங்கள் வரை, இத்தேநீர்கள் தனிப்பட்ட கதை கொண்டவை. இந்த வகையான தேநீர்கள், […]
ஆலந்தூர், மடிப்பாக்கம், திருவான்மியூர்,பல்லாவரம், போரூர், தாம்பரம்,ஆவடியில் இன்று மின் நிறுத்தம். இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக மின் நிறுத்தம். சென்னையில் இன்று மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆலந்தூர், மடிப்பாக்கம், திருவான்மியூர், பல்லாவரம், போரூர், தாம்பரம்,ஆவடியில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்நிறுத்தம் […]

