வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 925 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வார இறுதி நாட்களையொட்டி 27, 28-ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 595 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, […]
திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்று சொல்வார்கள். அப்படி திருப்பதி ஏழுமலையானின் மறு உருவமாக அமைந்திருக்கும் ஒரு கோவில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். திருப்பதி ஏழுமலையான் என அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள், திருமணத்திற்காக குபேரனிடம் பெற்ற கடனுக்காக ஒரு கட்டத்தில் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார். அப்போது அந்த கடன் பிரச்சனையைத் தீர்த்து வைத்த புனிதத்தலம் தான் சில்பூர் புகுலு வெங்கடேஷ்வர சுவாமி கோவில். இந்த கோவில் தெலுங்கானா மாநிலம் […]
டி.என்.பி.எல். தொடரின் 23-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மதுரை அணி முதலில் களமிறங்கியது. திருச்சி அணியின் துல்லிய பந்துவீச்சினால் மதுரை அணி முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்தது. அந்த அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு […]
திருமணம் செய்து கொண்ட திருநங்கைக்கு குடும்ப வன்முறை புகார் அளிக்க உரிமை உண்டு என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 498A இன் கீழ், ஒரு பெண் தனது கணவர் அல்லது கணவரின் உறவினர்களால் வன்முறைக்கு ஆளானால் புகார் அளிக்க உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருநங்கைகளுக்கு அத்தகைய பாதுகாப்பு பொருந்தாது என்ற வாதத்தை நீதிபதி வெங்கட ஜோதிர்மயி பிரதாபா […]
சென்னையைச் சேர்ந்த 30 வயது ரோபாட்டிக்ஸ் என்ஜினியர் ஒருவர், 11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ரெனே ஜோஷ்லிடா என்ற பெண் பல போலி இமெயில் ஐடிகளை உருவாக்கி, பல மாதங்களாக ரகசியமாக இருக்க VPNகள் மற்றும் டார்க் வெப்களைப் பயன்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது முன்னாள் சக ஊழியர் ஒருவரை சிக்க வைப்பதற்காக அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.. ரெனே […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகளவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகும் […]
திருவண்ணாமலையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர், ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கோயிலுக்கு நன்கொடையாக அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்னமங்கலம் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் எஸ். விஜயன். 65 வயதான ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் தனது மகள்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது சொத்துகளை கோயிலுக்கு ஆனால் தற்போது […]
மனைவியால் விவாகரத்து செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் ஆண் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தெலங்கானா உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. திருமண பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான சதா-இ-ஹக் ஷராய் கவுன்சில் வழங்கிய விவாகரத்துச் சான்றிதழை எதிர்த்து அந்த கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். […]
9 கிரகங்களில் சனி பகவான் மட்டும் நீதிபதி என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீஞ்செயல்களுக்கு ஏற்ப பலன்களையும் சனி பகவான் வழங்குகிறார். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. எனவே சனிப் பெயர்ச்சி தனது இயக்கத்தை மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூலை 13-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை வக்ர […]
இந்தியாவின் பல மாநிலங்களில் பரவலாக இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை சட்ட விரோதமாகக் கூறி, அதைத் தடை செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், “அனைத்து மாநிலங்களிலும் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. மக்கள் கட்டாயமாக பயன்படுத்த வேண்டிய நெடுஞ்சாலையில் பயணிக்க பணம் வசூலிப்பது ஒரு சட்டவிரோத […]

