தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி வியூகங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது. இது தங்கள் கட்சியின் வாக்குகளை பிரித்துவிடுமோ என்ற அச்சத்திலும் அரசியல் தலைவர்கள் இருந்து வருகின்றனர். விஜய் தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், 2026 சட்டமன்றத் […]

இந்தியா போஸ்டில் இருந்து வந்ததாகக் கூறிக்கொள்ளும் ஒரு போலி எஸ்எம்எஸ் செய்தி பரவி வருகிறது, இது சந்தேகத்திற்கிடமான இணைப்பு மூலம் பயனர்கள் தங்கள் முகவரியைப் புதுப்பிக்குமாறு வலியுறுத்துகிறது. இது ஒரு மோசடி என்பதை PIB (Press Information Bureau) உண்மைச் சரிபார்ப்புக் குழு உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் இந்தியா போஸ்ட் அத்தகைய செய்திகளை அனுப்புவதில்லை. PIB, அதன் அதிகாரப்பூர்வ X தளத்தில், இந்திய போஸ்ட் ஆபீஸிலிருந்து உங்களுக்கு ஒரு பேக்கேஜ் வந்துள்ளது. […]

மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலமாக எளிய முறையில் விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சரின் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் […]

இந்து சமயத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு வாகனம் உண்டு. அந்த வகையில் நாய், காலபைரவரின் வாகனமாக கருதப்படுகிறது. அதனால்தான், பலரும் நாய்களை பைரவரின் வடிவமாக கருதி வழிபடுகின்றனர். பைரவரின் அருளை பெற, நாய்களுக்கு உணவளிப்பது ஒரு முக்கியமான பரிகாரமாகவும், வழிபாடாகவும் பார்க்கப்படுகிறது. பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவராக, அவரது ருத்ர வடிவமாக கருதப்படுகிறார். சிவாலயங்களில் நந்திக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போலவே, பைரவருக்கும் அதிக முக்கியத்துவம் உண்டு. காசி மாநகரம் […]

இந்து சமய அறநிலையத்துறையின் இந்த நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு படி, திருமுறைகளை குறைவின்றி ஓதிட ஏதுவாக இக்கோயிலில் புதியதாக ஓதுவார் பயிற்சிப் பள்ளி பகுதி நேர வகுப்பாக தொடங்கப்படுகிறது. அந்த வகையில் வடபழனி முருகன் கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 13-ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ஓதுவார் பயிற்சி பள்ளியில் பயிற்சி […]

புழல் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு. குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான ஆவணங்கள் சிறைத் துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன. புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி. இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்தும் அவருக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக நுழைவாயில் […]

வாடகையாளர் கட்டாத மின் கட்டண பாக்கி தொகையான ரூ.6,63,949ஐ கட்டிட உரிமையாளர் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின் புகார் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, வாடகையாளர் காலி செய்திருந்தாலும், மின் பாக்கிய உரிமையாளர் தான் செலுத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பி.கண்ணன் என்பவர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார், அவர் தனது முன்னாள் குத்தகைதாரரான பாரதி பேப்பர் புராடக்ட்ஸ் பயன்படுத்திய மின் நுகர்வுக்கான கட்டணத்தை தான் செலுத்த […]

கல்லூரிகள் இணையக் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சைபர் விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடத்தை மற்றும் தரவு தனியுரிமை குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த பரிந்துரைகளுக்கு ஏற்ப, 2024 நவம்பர் 6-ம் தேதி, யு.ஜி.சி. “உயர் கல்வி நிறுவனங்களுக்கான சைபர் ஹைஜீன் அடிப்படை வழிகாட்டியை வெளியிட்டது. எனவே, உயர்கல்வி நிறுவனங்கள், உரிய வழிகாட்டுதலை […]

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள வில்வாரணி கிராமத்தில் குன்றின் மீது பேரழகோடு வீற்றிருக்கிறார் முருகப் பெருமான். இந்த கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. கார்த்திகை பெண்கள், 27 நட்சத்திரங்கள், தேவர்கள், ஏன் நாகங்கள் கூட தினமும் வந்து வழிபடும் அரிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. இந்த கோவில் அமைந்துள்ள மலை, நட்சத்திர கிரி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மலைக்கோவில், முருகப் பெருமான் […]

தமிழகத்தில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு தெலங்கானா மற்றும் அதையொட்டிய விதர்பா பகுதிகளில் நிலவியது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய விதர்பா மற்றும் அதையொட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். […]