இந்திய மின்சார வாகன சந்தையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்த டாடா மோட்டார்ஸ் புதுப்பிக்கப்பட்ட Punch.ev-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது மிகச்சிறிய மின்சார SUV-க்கான முதல் பெரிய புதுப்பிப்பு ஆகும். ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 9.69 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் உயர் வகை ரூ. 12.59 லட்சமாக உயரும். முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. டெலிவரி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வகை, விலை Punch.ev மூன்று வகைகளில் கிடைக்கிறது. […]

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக தரப்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பான காய்நகர்த்தல்கள் தற்போதே தீவிரமடைந்துள்ளன. இந்த முறை கூட்டணிக் கட்சிகளின் தயவை விட, சொந்த பலத்தை நிரூபிப்பதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதை அறிவாலய வட்டார தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில், சுமார் 165 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்கி, அறுதிப் பெரும்பான்மையைத் தனித்து ஈட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார். […]

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. புதிய சிம் கார்டு பெறுவதும், நெட்வொர்க் சிக்கல்களை சரிசெய்வதும் பொதுவான விஷயங்கள். இருப்பினும், இந்த செயல்பாட்டில், ஆதார் அட்டையின் தவறான பயன்பாடு அதிகரித்துள்ளது, மேலும் நமக்குத் தெரியாமல் கூடுதல் சிம் கார்டுகள் நம் பெயரில் பதிவு செய்யப்படுகின்றன, இது கவலைக்குரிய விஷயம். சமீபத்தில், பலர் தங்கள் ஆதாரில் அங்கீகரிக்கப்படாத சிம் கார்டுகள் […]

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் புரூஸ்பேட்டை பகுதியில் விஜயநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேகர் (31) மற்றும் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சுகாசினி (29) ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் வாடகைக்கு எடுத்து ஒரு குடும்பமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது நீண்ட கால பந்தம், இவ்வளவு கொடூரமான முறையில் முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், […]

பெங்களூரு கோரமங்களா உள்விளையாட்டு அரங்கில் கடந்த பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெற்ற பெண்களுக்கான நட்சத்திர கிரிக்கெட் தொடர், தற்போது ஒரு கிரிமினல் வழக்காக உருவெடுத்துள்ளது. 10 அணிகள், நூற்றுக்கணக்கான திரைத்துறை மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் என கோலாகலமாக நடந்த இத்தொடரில், ‘ஷராவதி சக்திஸ்’ அணி வெற்றிவாகை சூடியது. ஆனால், இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்குப் பின்னால், ஒரு பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகைக்கு நேர்ந்த கொடுமை […]

தொழில்நுட்பம் மிகவும் நவீனமாகி வருகிறது. புதிய தொழில்நுட்பங்களுடன், அனைத்து பணிகளும் எளிதாகி வருகின்றன. இப்போது பலர் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு பழகிவிட்டனர். கூகுள் பே மற்றும் போன்பே ஆகியவை யுபிஐ கட்டண முறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது போன்பே ஆன்லைன் கட்டணங்களில் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல், ஆன்லைன் கட்டணங்களை கைரேகை மூலம் மட்டுமே செய்ய முடியும். அதாவது, எந்த பின் எண்ணையும் உள்ளிட வேண்டிய அவசியமில்லை. சமீபத்தில் […]

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள தேவரஹிப்பராகி பகுதியில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பிரபு ரத்னாகர் (50), தனது குடும்பச் செலவுகள் மற்றும் தொழில் விரிவாக்கத்திற்காக அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். ஒருகட்டத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நெருக்கடி முற்றியபோது, தனது மனைவி சரோஜினியின் (45) பெயரிலும் கடன் வாங்கியுள்ளார். இந்த நிதி மேலாண்மை சிக்கலால் அந்த இல்லத்தில் நிம்மதி மறைந்து, தினந்தோறும் சண்டை சச்சரவுகள் அரங்கேறி […]

குளிர்காலத்தின் வருகை சருமத்தில் பல மாற்றங்களை கொண்டுவருகிறது. வறண்ட சருமம் மற்றும் முக வெடிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், பலரையும் வேதனைக்குள்ளாக்குவது குதிகால் வெடிப்புதான். இது நடக்கும்போது வலியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பார்ப்பதற்கும் சங்கடத்தை உருவாக்கும். இதற்காக சந்தையில் கிடைக்கும் ரசாயனங்கள் கலந்த விலையுயர்ந்த கிரீம்களை தேடி ஓடுவதற்கு முன், உங்கள் சமையலறையில் நாம் சாதாரணமாக தூக்கி எறியும் ஒரு பொருளை கொண்டு இதற்கு தீர்வு காண முடியும் என்பது உங்களுக்குத் […]

இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்பின் தாக்கம் வங்கிகளின் நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களில் தெளிவாக தெரிகிறது. அரசு வங்கிகளில் FD விகிதங்கள் சமீபத்தில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளன. இருப்பினும், வங்கிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்க சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) அதன் அம்ரித் விருஷ்டி சிறப்பு FD திட்டத்துடன் ஈர்க்கிறது. முன்னதாக […]

தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, இன்று அதன் வரலாற்றிலேயே காணாத ஒரு மிகப்பெரிய பிளவைச் சந்தித்துள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களின் சமீபத்திய உத்தரவுகளின்படி, பாமகவின் அதிகாரப்பூர்வ கட்டுப்பாடு மற்றும் ‘மாம்பழம்’ சின்னம் ஆகியவை முழுமையாக அன்புமணி ராமதாஸ் வசமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது விசுவாசிகளை ஒன்றிணைத்து ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கி, தனது அரசியல் […]