புதுச்சேரியில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மாதாந்திர உணவு தானிய மானிய தொகையை தடையின்றி பெறுவதற்கு, ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைப்பேசி எண்களை உரிய ஆவணங்களுடன் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், தவறினால் மானியம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை திட்டவட்டமாக எச்சரித்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன […]

தேசிய தேர்வு முகமை (NTA) தனது தேர்வு முறையில் பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தனது குழுக்களிலிருந்து 600 நிபுணர்களை நீக்கிவிட்டு, புதிய வல்லுநர்களைப் பணியமர்த்தத் தொடங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்வுக்கும் முன்பாக வினாத்தாள்களை நான்கு கட்டங்களாகத் தீவிர ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களின் வினாத்தாள்களில் கடுமையான குறைபாடுகள் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது […]

இன்றைய காலத்தில் குழந்தைகள் சாப்பிட மறுக்கும் போது, அவர்களை சமாதானப்படுத்துவதற்காக செல்போனில் வீடியோ, யூடியூப் அல்லது ரீல்ஸ் போன்றவற்றை காட்டியபடியே உணவு கொடுப்பது பல வீடுகளில் வழக்கமாகிவிட்டது. ஆரம்பத்தில் குழந்தையை எளிதாக சாப்பிட வைக்கும் ஒரு வழியாகத் தோன்றினாலும், தொடர்ந்து இதே முறையைப் பின்பற்றும்போது, செல்போன் இல்லாமல் சாப்பிட முடியாத நிலைக்கு குழந்தைகள் பழகிவிடும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, இந்தப் பழக்கம் அவர்களின் உணவு உண்ணும் முறையிலும் சில மாற்றங்களை […]

இந்திய பேட்மிண்டன் இளம் நட்சத்திரம் ஆயுஷ் ஷெட்டி, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் 49 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை எவருமே செய்யாத ஒரு பிரம்மாண்ட வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி அரங்கில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், நடப்பு சாம்பியனும் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவருமான சீனாவின் ஷி யு கியை வீழ்த்தி ஆயுஷ் ஷெட்டி அதிரடி வெற்றி […]

தமிழ்நாட்டில் பயணிகள் நடமாட்டம் குறைவாக உள்ள வார நாட்களில், போதிய வருவாய் ஈட்டாத அரசுப் பேருந்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் போக்குவரத்து மண்டலங்களிலும் குறைவான வருவாய் உள்ள வழித்தடங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்ட நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் […]

உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை முழுமையாகத் தடை விதித்துள்ளது. கோயிலின் புனிதம் மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும், சாமி சன்னதிகள் மற்றும் பிரகாரங்களில் ரீல்ஸ், வீடியோக்கள் மற்றும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லும் […]

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, கடந்த 10 நாட்களில் 3 காட்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால் இயற்கையான நீர்நிலைகள் வறண்டு வரும் நிலையில், வனவிலங்குகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக, மசினகுடி […]

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் ரூ.4.80 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 79 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தலைமுடி காணிக்கை செலுத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.அதே நாளில் பக்தர்களுக்காக சுமார் 3.95 லட்சம் லட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது, என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், வைகுண்டம் கியூ […]

சமூக வலைதளங்களில் எழும் சிறிய விமர்சனங்களுக்குக் கூட காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்வதும், கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதும் துரதிருஷ்டவசமானது என முதலமைச்சர் விஜய்க்கு, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் மக்களின் மாற்றுக்கருத்துகளையும் நியாயமான விமர்சனங்களையும் அலட்சியப்படுத்தியதே கடந்த காலங்களில் திமுக வீழ்ச்சியடைந்ததற்கான முதன்மைக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது தவெக […]

தமிழ்நாடு அரசின் 2026–27 நிதிநிலை அறிக்கையின் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின் கீழ், அரசு ஊழியர்கள், போட்டித் தேர்வர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் அறிவித்தார். ➣ அரசுப் பெண் பணியாளர்களுக்கு மூன்றாவது குழந்தைப் பேறுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பானது 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக (1 ஆண்டு) உயர்த்தி வழங்கப்படும். ➣ டிஎன்பிஎஸ்சி (TNPSC), எஸ்எஸ்சி (SSC), ரயில்வே […]