ஆஸ்திரேலியாவை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருக்கு, தான் கர்ப்பமானதை உறுதிப்படுத்திய 17 மணிநேரத்தில் ஆண் குழந்தை பிறந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவைச் சேர்ந்த சார்லோட் சம்மர்ஸ், 20, என்ற இளம்பெண், அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை பிரச்னைக்காக மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர், கர்ப்ப பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளார். இதை நம்பாத சார்லோட், மருத்துவர் கூறிவிட்டாரே என பரிசோதனை செய்தபோதுதான், கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. […]

ஸ்பெயினில் நேற்று இரவு சுமார் 10.43 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, மக்கள் பீதியடைந்தனர். விமான நிலையத்தின் கூரை இடிந்து விழும் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், உயிர் சேதம் ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. நிலநடுக்கத்துடன், கனமழை மற்றும் வெள்ளமும் சிக்கலை அதிகரித்துள்ளது. ‘ தி லோக்கல் இஎஸ் ‘ அறிக்கையின்படி , ஸ்பெயினில் உள்ளூர் நேரப்படி காலை 7.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. […]

அயர்லாந்தின் கள்வே கவுண்டியில் அமைந்துள்ள சிறிய நகரமான டுவாம் (Tuam) பகுதியில், கிட்டத்தட்ட 800 குழந்தைகள் மற்றும் பிறந்த உடனேயே மரணமான குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. வரலாற்றாசிரியரான கேத்தரின் கோர்லெஸின் கூற்றுப்படி, 1925 மற்றும் 1961 க்கு இடையில் பான் செகோர்ஸ் தாய் மற்றும் சேய் என்று அழைக்கப்படும் இல்லத்தில் 798 குழந்தைகள் இறந்தனர், ஆனால் இரண்டு குழந்தைகள் மட்டுமே முறையாக கல்லறையில் அடக்கம் […]

அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH) என்ற வகை ரேஷன் கார்டுகளைப் பெற்றிருக்கும் பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகையை (Biometric Authentication) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான காலக்கெடு ஜூலை 25, 2025 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் செயல்பட்டு வரும் AAY திட்டத்தின் கீழ் இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் […]

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அறிந்து குடிமக்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்த வழிகாட்டுதல்களை பரிசீலிக்குமாறும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்து கடவுள் குறித்து வஜகத் ஹான் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, இவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பல மாநிலங்களில் இவர் மீது எப் ஐ ஆர் போடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து […]

இந்திய ரயில்வேயில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளது. டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் Technician பணிக்கென காலியாக உள்ள 6238 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10-ம் வகுப்பு, ITI அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு 18 வயதில் இருந்து 30 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு […]