செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி விபத்துக்குள்ளானது. இதில் கூடுவாஞ்சேரி நகராட்சி 24 ஆவது வார்டு திமுக செயலாளர் ராம் பிரசாத் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் அருகே எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, அரசுப் பேருந்து மீது மோதியது. மேலும் சாலையோரம் உள்ள […]

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் […]

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையாகும். இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக அடுத்த மாதம் 9-ம் தேதி சனிக்கிழமை அன்று வேலைநாள் என அம்மாவட்ட கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று […]

அதிகரித்து வரும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், முக்கிய அமைப்புகள் மற்றும் குடிமக்களின் தரவைப் பாதுகாக்க ஒவ்வொரு இந்திய நகரமும் ஒரு தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியை (CISO) நியமிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு தயார்நிலை குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், ஒவ்வொரு இந்திய நகரத்திற்கும் ஒரு நியமிக்கப்பட்ட தலைமை […]

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; பள்ளி, கல்லூரி மாணவ. மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான மாவட்ட மண்டல […]

ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கும், அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் இது சக்தி வாய்ந்த அமாவாசையாக கருதப்படுகிறது. இந்த நாளில் தர்ப்பணம் மற்றும் பிற சடங்குகளைச் செய்வதன் மூலம், முன்னோர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்று, வாழ்வில் சுபிட்சம் உண்டாகும். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்வது சிறப்பானது. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, […]

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று தஞ்சாவூரின் பல பகுதிகளில் பயணம் மேற்கொண்டார். பட்டுக்கோட்டையில் சுற்றுப் பயணத்தின் பொது உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “அதிமுக உங்கள் […]