இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களின் திருமணங்களை பதிவு செய்ய அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கைகளின்படி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, 10.12.2018 முதல் திருமணப்பதிவுகள் Online மூலமே திருமணத்தரப்பினர்கள் விண்ணப்பித்து திருமண பதிவுகள் நடைபெறுகின்றன 10.12.2018 முதல் Star 2.0 மூலம் திருமண பதிவு செய்ய திருமண தரப்பினர்கள் இணையவழி உள்நுழைவில் […]

தாழ்வழுத்த பிரிவில் 26 ஆயிரம் டி.ஓ.டி மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. உயரழுத்த மின் இணைப்புகள், வணிக இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் இந்த டி.ஓ.டி. மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் தாழ்வழுத்தப் பிரிவுகளில் 42 லட்சம் இணைப்புகளுக்கு இந்த மீட்டர் பொருத்தப்படாமல் உள்ளது. இதில் 26 ஆயிரம் இணைப்புகளுக்கு டி.ஓ.டி. மீட்டர் பொருத்த மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம், சென்னை (வடக்கு), வேலூர், கோவை, மதுரை, நெல்லை […]

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அதன்படி, மாணவர் பெயர், பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டிசி) அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல், தலைமை ஆசிரியரின் கடிதம், கல்விச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என தேர்வுத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை […]

சீனாவில், COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு மற்றொரு சுகாதாரப் பேரழிவு உருவாகி வருகிறது. தெற்கு சீனாவின் ஷென்சென் அருகே உள்ள ஃபோஷான் நகரில் புதிய தொற்று பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. அதிக நோயாளிகளை தங்க வைக்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொற்று சிக்கன்குனியா என்று கூறப்படுகிறது. சீனாவில் சுகாதார அமைச்சகம் சிகுன்குனியா காய்ச்சல் நோயின் அபாயத்தில் உள்ளவர்களை பாதுகாக்கும் விதமாக ஒரு அவசர நடவடிக்கை […]

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்கள் ஆக. 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் […]

இந்து மத நம்பிக்கைகளின்படி, ஆண்கள் செய்யக்கூடிய பல செயல்கள் உள்ளன, ஆனால் அவை பெண்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளன . உதாரணமாக, இந்து மதத்தில், ஆண்கள் மட்டுமே தேங்காய் உடைக்கிறார்கள், ஆனால் பெண்கள் அவ்வாறு செய்வது தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. அதேபோல், இறுதிச் சடங்குகளின் போது பெண்கள் தகன மைதானத்திற்குச் செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்து மதத்தில் பெண்கள் தகன மேடைக்குச் செல்லாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், இந்தக் காரணங்கள் அனைத்தும் பல […]

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் கடலில் தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 280க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்ட கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பகிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிக்கொண்டு மனாடோ நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் […]