இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு […]

இந்தியாவின் மக்கள்தொகை சுகாதார கணக்கெடுப்பு 2019-21 இன் படி, காற்று மாசுபாடு 13 சதவீத முன்கூட்டிய பிறப்புகளுக்கும், 17 சதவீத குறைந்த எடை பிறப்புகளுக்கும் வழிவகுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு PLoS குளோபல் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டது, மேலும் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் மற்றும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்காக, […]

டெல்லியில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், டெல்லியில் யமுனை நதி நீர்மட்டம் அபாயக் குறி அளவைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், ஹரியானாவில் உள்ள ஹதினிகுண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் யமுனை நதியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நீர்மட்டம் எச்சரிக்கை அளவை விட 1.3 மீட்டர் குறைவாகவும், அபாய அளவான […]

மருத்துவரை காதலித்து திருமணம் செய்த யூடியூபர் ‘டெக் சூப்பர் ஸ்டார்’ சுதர்சன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொபைல், டிவி, லேப்டாப் உள்ளிட்ட டெக்னாலஜி கேட்ஜெட்கள் பற்றி ரிவ்யூ செய்து வீடியோ வெளியிட்டு வருபவர் சுதர்சன். முன்பு டெக் பாஸ் என்ற யூடியூப் சேனலில் இயங்கி வந்த சுதர்சன், தற்போது ‘டெக் சூப்பர் ஸ்டார்’ என்ற சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சுதர்சன் […]

மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்த வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்று மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்திட்டத்திற்கு மத்திய அரசு 99,446 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். உற்பத்தித்துறையில் இத்திட்டம் அதிக கவனம் செலுத்தும் என்று கூறிய அவர், நாட்டில் உற்பத்தியை மட்டுமல்லாமல் ஆராய்ச்சியையும் இது […]

மத்திய காலத்திலிருந்து மறுமலர்ச்சி காலம் வரை, போர் மற்றும் மோதல்கள் தொடர்ச்சியான நிகழ்வாக இருந்து வருகின்றன. சமீபத்தில், இஸ்ரேல் மற்றும் காசா, ரஷ்யா மற்றும் உக்ரைன், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலை உலகம் கண்டுள்ளது, மேலும் சீனா மற்றும் தைவானுடனான பதட்டங்கள் கூட பிடிவாதமாக நீடிக்கின்றன. இத்தகைய போர்களும் மோதல்களும் பரவலான அழிவை உருவாக்குகின்றன. அதிக எண்ணிக்கையிலான கட்டிடங்கள் அழிக்கப்படுகின்றன, மக்கள் தங்கள் வீடுகளை […]

பிஐஎஸ் தரச் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் இந்திய தர நிர்ணய அமைவனமான பிஐஎஸ்-ஆல் சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்துமாறு மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையும் தர நிர்ணய அமைவனமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. பிஐஎஸ்-சின் தரச் சான்றிதழ் இல்லாமல் தலைக் கவசங்களைத் தயாரிப்பது அல்லது விற்பனை […]

குஜராத்தில் சட்டவிரோதமாக ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை செய்த 2,352 பேரில் 741 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் மாநில அரசு நடத்தும் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IKDRC) ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2352 நோயாளிகளில் 741 பேர் இறந்ததாக CAG அறிக்கை வெளியாகி உள்ளது. 1999 மற்றும் 2017 க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை சட்டவிரோதமாக […]

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்; சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்தக் கூட்டம், கிராம கமிட்டியினருக்கு நவீன ஐ.டி. கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். வரும் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று எம்.பி.எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டணி குறித்தும், எந்த தொகுதிகளைக் கேட்க […]

அதிபர் டிரம்பின் வரி கொள்கை சட்டத்தை விமர்சித்து வந்த எலான் மஸ்க், ‘அமெரிக்கா கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். தற்போது டிரம்ப் -மஸ்க் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்தனர். அமெரிக்க அதிபர் டிரம்பை நேரடியாக எதிர்க்க துவங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், புதிய கட்சி துவங்க இருப்பதாக கூறியிருந்தார். […]