திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. விழா நாளான நாளை (ஜூலை 7, 2025) பக்தர்கள் வெள்ளம் பெருகும் நிலையில், கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கோவிலுக்கு முன்புள்ள கடற்கரையில், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை குழுவினர் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர் இணைந்து, […]
சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிறு கிழமை என்பதால் குறைவான ஊழியர்கள் மட்டும் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் […]
Holiday for schools and colleges in Tamil Nadu tomorrow..? Information spread.. Tamil Nadu government explains!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கி, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க தலைமை நிர்வாக குழுவில் அன்புமணி […]
கர்ப்ப காலத்தில் சிக்கன் சாப்பிட பலர் பயப்படுகிறார்கள். சிக்கன் சாப்பிட்டால் சூடு பிடிக்கும்.. அல்லது வேறு ஏதாவது நடக்கும் என்ற தவறான எண்ணம் அவர்களிடம் உள்ளது. ஆனால் நிபுணர்கள் சிக்கன் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது என்று கூறுகிறார்கள். அதை எப்படி சாப்பிடுவது நல்லது என்பதை இங்கே பார்ப்போம். கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உண்ண வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், பலர் கர்ப்ப காலத்தில் சிக்கன் […]
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு […]
இந்தியாவின் மக்கள்தொகை சுகாதார கணக்கெடுப்பு 2019-21 இன் படி, காற்று மாசுபாடு 13 சதவீத முன்கூட்டிய பிறப்புகளுக்கும், 17 சதவீத குறைந்த எடை பிறப்புகளுக்கும் வழிவகுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு PLoS குளோபல் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டது, மேலும் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் மற்றும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்காக, […]
டெல்லியில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், டெல்லியில் யமுனை நதி நீர்மட்டம் அபாயக் குறி அளவைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், ஹரியானாவில் உள்ள ஹதினிகுண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் யமுனை நதியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நீர்மட்டம் எச்சரிக்கை அளவை விட 1.3 மீட்டர் குறைவாகவும், அபாய அளவான […]
மருத்துவரை காதலித்து திருமணம் செய்த யூடியூபர் ‘டெக் சூப்பர் ஸ்டார்’ சுதர்சன் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொபைல், டிவி, லேப்டாப் உள்ளிட்ட டெக்னாலஜி கேட்ஜெட்கள் பற்றி ரிவ்யூ செய்து வீடியோ வெளியிட்டு வருபவர் சுதர்சன். முன்பு டெக் பாஸ் என்ற யூடியூப் சேனலில் இயங்கி வந்த சுதர்சன், தற்போது ‘டெக் சூப்பர் ஸ்டார்’ என்ற சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சுதர்சன் […]

