உலகிலேயே மிக நீளமான மற்றும் மிகவும் விஷமுள்ள பாம்பு ராஜ நாகம். இது 20-25 ஆண்டுகள் வாழக்கூடியது மற்றும் முட்டைகளுக்காக கூடு கட்டும் ஒரே பாம்பு இது. இது மரங்களில் ஏறவும், நீந்தவும், மற்ற பாம்புகளை வேட்டையாடவும் முடியும். பாம்புகள் மீது மக்களுக்கு பெரும்பாலும் பயமும் ஆர்வமும் இருக்கும். குறிப்பாக ராஜநாகம் போன்ற விஷப் பாம்பைப் பொறுத்தவரை, பயம் மேலும் அதிகரிக்கிறது. அதன் நீளம், பேட்டை விரிக்கும் பாணி மற்றும் […]

மாதவிடாய் காலத்திலும் தொடர்ந்து உல்லாசத்திற்கு அழைத்த கள்ளக்காதலனை, கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அரவிந்த். இவருக்கு வயது 29. இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அரவிந்த் – ஜான்சி தம்பதிக்கு சாரிகா (வயது 4) என்ற பெண் […]

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கினாலும், தினமும் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது குறிப்பாக வயதானவர்களின் உடல்நலனில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் பரவலாக பருகப்படும் ஆப்பிள் ஜூஸ், இன்று பெரியவர்களிடையே ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பருக வேண்டிய ஒரு பானமாக மாறியுள்ளது. ஆப்பிள் ஜூஸ் நீரேற்றம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்கும் அதிசய பானம் என்றாலும், அதில் உள்ள இயற்கை சர்க்கரைகள் மற்றும் குறைந்த […]

ஆப்ரேஷன் சிந்தூருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையாக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களுக்கு சிலிண்டர், நீர், செய்தித்தாள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை விநியோகத்தை நிறுத்தி துன்புறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூரின் போது ஏற்பட்ட பெரும் இழப்புகளால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களை […]

பங்களாதேஷை சேர்ந்த 12 சிறுமியை இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே வசாய் நைகாவ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் விபச்சார தொழில் நடப்பதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த போலீசார், மாற்று உடையில் கண்காணித்தனர். பின்னர், அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த கட்டிடத்திற்குள் போலீசார் […]

சேலம் மாவட்டத்தில் அரசு கல்லூரி வளாகங்களில் சிறுதானிய உணவகம் அமைத்திட விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட அறிவிப்பில்; தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் அவர்களின் 2025-2026 ஆம் ஆண்டு செயல்திட்டத்தில், சேலம் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அரசு கல்லூரி வளாகங்களில் சிறுதானிய உணவகம் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மேட்டூர் அரசுக்கலைக்கல்லூரி, சேலம் […]