தினமும் காலையில் கருப்பு மிளகு மற்றும் தேனுடன் சேர்த்து உட்கொள்வதன் மூலம், பல உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். அதன் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம். ஆயுர்வேதத்தில் தேன் மற்றும் கருப்பு மிளகு இரண்டும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இவற்றை ஒன்றாக உட்கொண்டால், அவை பல கடுமையான நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும். இந்த வீட்டு வைத்தியம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை […]

12 வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று மதியம் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.தேர்வு எழுதியவர்களில், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படுகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்; தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.தேர்வு எழுதியவர்களில், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் […]

2025-2026 ஆம் கல்வியாண்டு வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான மண்டல வாரியாக ஒருங்கிணைப்பு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் வட்டார அளவில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி மையம் (Career Guidance Centre) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025 2026 ஆம் கல்வியாண்டிலும் வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் செயல்படுத்தப்பட […]

நடிகர் சூர்யா பட புரமோஷன் நிகழ்ச்சியில் பழங்குடி சமூகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானியர்கள் 500 ஆண்டு பழமையான பழங்குடியின மக்கள் போல் அறிவில்லாமல் இருக்கின்றனர் என கடுமையாக விமர்சனம் […]

நீதிமன்ற உத்தரவுகளை தவறாமல் செயல்படுத்த வேண்டும் என மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்ற வழக்கில், “தொகையை திருப்பி செலுத்துதல் உள்ளிட்டவற்றில் வாரியம் மீண்டும் மீண்டும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறது. அவமதிப்பு என்ற நிலை வந்த பிறகே உத்தரவுகளை செயல்படுத்துவதையும், அதன் பிறகும் உத்தரவை நிறைவேற்ற அவகாசம் கேட்பதையும் ஏற்க முடியாது. இதுபோன்றவற்றை விரைந்து சரி […]

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலை, சர்வதேச பொருளாதாரத்துக்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது அமெரிக்கா நேரடியாக களமிறங்கி, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வெளி தாக்குதலை மேற்கொண்டது. இது ஈரானை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு, சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களை பதட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. பங்குசந்தைகள் மற்றும் […]

பொதுத்தேர்வுகள் எழுதி , மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள் , மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ( Notification பகுதியில் ) இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. நடைபெற்று முடிந்த மார்ச் 2025 , மேல்நிலை இரண்டாம் பொதுத்தேர்வுகள் எழுதி , மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள் , மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் […]

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சீனா விஞ்ஞானிகள் மிகச் சிறிய, கொசு அளவிலான ட்ரோன்களை ராணுவ பயன்பாட்டுக்காக உருவாக்கியுள்ளனர். இதுதொடர்பாக South China Morning Post (SCMP) செய்தி நிறுவனத்தின்படி, இந்த மிகச்சிறிய கொசு அளவிலான ட்ரோன் (micro drone) சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹூனான் மாகாணத்தில், தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு (National University of Defence Technology – NUDT) உட்பட்ட ஒரு […]

துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இன்று மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு […]

சிவபெருமானுக்கு வழக்கமாக வில்வ இலை மட்டுமே அர்ப்பணிக்கப்படுகிறது என்பது பெரும்பான்மையோர் அறிந்த உண்மை. ஆனால், தமிழகத்தில் ஒன்றே ஒரு கோயிலில் மட்டுமே துளசி இலைகளால் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் மரபு தொடர்ந்து வருகிறது என்பதை பலர் அறிய வாய்ப்பில்லை. சென்னை – வல்லக்கோட்டை பாதையில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள வில்வவன நாயகி சமேத துளசீஸ்வரர் கோயில் இந்த மரபின் பிரத்தியேக சாட்சி ஆகும். இங்கு துளசீஸ்வரர் என்ற திருநாமத்தில் […]