பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கி பதிலடி கொடுத்தது. இதற்கு பாகிஸ்தான் இந்திய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தாக்கியது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தாக்குதல் போர் சூழல் நிலவியது. இதில் பாகிஸ்தான் படைகளுக்கு தலைமை தாங்கிய அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீருக்கு அந்நாட்டில் உயரிய பதவி வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதனால், அவர்மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன. இந்த நிலையில், அமெரிக்காவுடனான […]

காதலனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு பெண், திடீரென கணவரும் மாமியாரும் போலீசாருடன் வந்ததை பார்த்ததும் ஹோட்டல் சுவரில் இருந்து குதிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் பராத் பகுதியில் உள்ள ஒரு OYO ஹோட்டலில் அந்த பெண் தனது கள்ள காதலனுடன் தங்கியிருந்தார் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த பெண்ணின் கணவர் குடும்பம் போலீசாருடன் ஹோட்டல் அறைக்கு வந்தனர். […]

இஸ்ரேலுடன் நடந்து கொண்டிருக்கும் போர் காரணமாக, ஈரான் அரசு தனது குடிமக்களை வாட்ஸ்அப் பயன்பாட்டை தங்களது மொபைல் போன்களிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த வெள்ளியன்று ஈரானின் அணு சக்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல், சமீபத்திய பதற்றங்களின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ’Operation Rising lion’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ’True promise 3’ என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே, இஸ்ரேலும் ஈரானும் […]

சென்னையில் முதல் கட்டமாக 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் தொடங்கி வைக்கிறார். இதன் சிறப்பம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், சென்னை மாநகராட்சி புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மெரினா கடற்கரையில் தொடங்கி வைக்க உள்ளார். மக்கள் […]

50 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சை உதவித்திட்டம் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தொழிலாளர் நல இயக்குநரகம் மூலம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின், குறிப்பாக பீடி, திரைப்படம் மற்றும் சுரங்கத் துறை தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 50 […]

மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தில் கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, மூன்றாவது மற்றும் இறுதியாக குரோஷியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரதமர் மோடி, 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக கடந்த திங்கள்கிழமை மாலை சைப்ரஸ் சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று கனடாவின் கால்கரிக்கு சென்றடைந்தார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவுக்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இதையடுத்து, ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இந்தியா – கனடா […]

இந்தோனேசியாவில் லக்கி-லக்கி என்ற எரிமலை வெடித்து, காற்றில் 11 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் மேகத்தை பரப்பியது, இதனால் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை செவ்வாய்க்கிழமை பெரிய அளவில் வெடித்துள்ளது. இந்த வெடிப்பால் காற்றில் 11 கிமீ உயரத்திற்கு சாம்பல் மேகம் பறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அதிகபட்ச எச்சரிக்கை நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா 270 மில்லியன் […]

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை…. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் முதல் சூப்பர் ஹீரோ அப்பாக்கள் தான். ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக இரவும் பகலும் அயராது உழைக்கிறார், அதனால் அவர் தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும், தனது குடும்பத்தை ஆதரிக்கவும் செய்கிறார். இந்த கடின உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையிலும், அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் என எல்லாவற்றிக்கும் […]

காவல்துறையில் 25 வருடங்கள் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு பெற்றதாக பதவி உயர்வு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் துறையில் பதவி உயர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தலைமைக் காவலர் பதவியில் 10 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்து, மொத்தம் 25 ஆண்டுகள் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றும் தலைமைக் காவலர்களை பதவி உயர்வு வழங்கப்படும். நகரங்களில் உள்ள ரேஞ்ச் துணை காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு அதிகாரங்களை வழங்கி, வழிகாட்டுதல்களை […]