பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை “ஓசி” என்று தரம் தாழ்ந்து விமர்சித்து பேசிய ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில்; கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை “ஓசி” என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன் முன்னாள் திமுக அமைச்சர் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சீரமைப்பது குறித்து முடிவெடுக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் இரண்டு வாரங்களில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள அபாயகரமான கழிவுகளை அகற்றவும், ஆலையை இடிக்க கோரியும் சமூக ஆர்வலர் பேராசிரியை பாத்திமா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் […]
11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அறிக்கை தாக்கலாகுமா? என கேள்வி எழுந்திருக்கிறது நடப்பாண்டில் நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது. ஐபிஎல் கோப்பையை வெல்வது 18 வருட கனவு என்பதால், இந்த வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாட ஆர்சிபி அணி நிர்வாகம் […]
திரிபுராவில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அமர்நாத் யாத்திரை பணிக்காக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் பாழடைந்த மற்றும் அழுக்குப் பெட்டிகளைக் கொண்ட ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பான விவகாரத்தில் 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்து, விசாரணை நடத்தவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ம் தேதி வரை 38 நாட்கள் நடைபெற உள்ளது. […]
நீர்நிலை, புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்கள் தனியாருக்குப் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க, பத்திரப் பதிவுத்துறை புதிய வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது. ‘தமிழ் நிலம்’ தகவல் தொகுப்பில் சிறப்பு குறியீடு வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுக்காக சர்வே எண்ணை உள்ளிடும் போது, அது அரசு நிலமா என்பதை தானியங்கி முறையில் கண்டறிந்து, பதிவைத் தடுக்கும். இதனால், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்கள் அபகரிப்பு செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு […]
ஆந்திரப் பிரதேச அரசு வியாழக்கிழமை ‘தாய்க்கு வந்தனம்’ என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளி செல்லும் குழந்தைக்கும் ஆண்டுதோறும் ரூ.15,000 வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக ரூ.8,745 கோடியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ‘சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் அறிவித்த வாக்குறுதி இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு […]
ஒரு காலத்தில் இதய நோய் என்பது ஆண்களின் பிரச்சனையாகக் கருதப்பட்டது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களிடையே மாரடைப்பு அதிகரித்து வருகிறது, இது அகால மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. 45-55 வயதிற்குப் பிறகு, மாதவிடாய் நிறுத்தத்துடன் சேர்ந்து, இந்த ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இந்தக் கட்டத்தில், ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது இருதய பாதிப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குருகிராமில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆராய்ச்சி நிறுவனத்தின் CTVS […]
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் […]
ஐ.சி.சி., ‘டி-20’ பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா ‘நம்பர்-3’ இடத்துக்கு முன்னேறினார். சூர்யகுமார் யாதவ் 5வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டார் சர்வதேச ‘டி-20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் திலக் வர்மா, 804 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் சர்மா […]
The Delhi government has decided to impose a fine of up to Rs 10 lakh on private schools that do not comply with tuition fee regulations.

