அமெரிக்காவில் சாலை போடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, இந்திய பெண் ஒருவர் மெதுவடை மற்றும் தேங்காய் சட்னி உணவாக அளித்த நிலையில், அதை பார்த்த அந்த தொழிலாளர்கள், “இப்படி ஒரு உணவா! என மெய்சிலிர்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில், ஒரு இந்திய பெண் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தென்னிந்தியாவில் மிக பிரபலமான மெதுவடையை அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் சமைத்து, அருகில் […]
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் ஆனவர்கள், தாங்கள் வளர்ந்த பிறகு நடிக்கும் படங்களில் பிரபலம் ஆவதில்லை. அப்படி பிரபலமானவர்களில் ஹீரோக்களே அதிகம். ஆனால் ஹீரோயின் ஒருவர் குழந்தை நட்சத்திரத்திலும், ஹீரோயினாக நடிக்கும் போதும் முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார். அந்த நடிகை யார் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஷாலினி தான். இவர், முதல் முறையாக 4 வயதில் மலையாளத்தில் […]
ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் அதாவது ஜூன் 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.71,360 ஆக இருந்த நிலையில் ஆறு நாள்களில் படிப்படியாக ரூ.1680 வரை உயர்ந்து, ரூ.73,040க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோல, வாரத் தொடக்கத்தில் ரூ.8,920 ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், படிப்படியாக ரூ.210 அதிகரித்து இன்று ரூ.9130க்கு விற்பனையானது. இந்த வாரம் முழுக்க […]
உங்களுக்கு இருதய நோய் இருந்தால், குறைந்த அளவிலான ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தீவிரமான இதய நோய்களை தடுப்பதற்காக, இரத்தம் கட்டியெடுக்காமல் ஓடச் செய்யும் மருந்துகள் உண்டு. அதில் ஆஸ்பிரின் குறைந்த அளவில் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆஸ்பிரின் என்பது இரத்தப்பிளேட்லெட்டுகள் (platelets) ஒன்றிணைந்து இரத்தக் கட்டிகளை உருவாக்குவதை தடுக்கும் செயல்பாட்டை கொண்டது. இதனால் […]
அதிக எடை பிரச்சனையால் பலர் அவதிப்படுகிறார்கள். எடை குறைக்க, பலர் சாப்பிடுவதை நிறுத்துகிறார்கள்.. அல்லது.. ஜிம்மிற்குச் சென்று கடினமாக உழைக்கிறார்கள். ஜிம்மில் எடை தூக்குவதன் மூலமும், கடினமான பயிற்சிகள் செய்வதன் மூலமும் அவர்கள் எடையைக் குறைக்கிறார்கள். இருப்பினும்.. ஒரு இளம் பெண் ஜிம்மிற்குச் செல்லாமல் வீட்டிலேயே 30 கிலோ எடையைக் குறைத்தார். வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளால் தான் எடையைக் குறைத்ததாக அவர் கூறினார். ஜிம்மிற்குச் செல்லாமல் எடை குறைப்பது மிகவும் கடினம் […]
மத்திய அரசின் உதவித்தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1ஆம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 2025-26 ஆம் நிதியாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பது […]
நாட்டில் தற்போது கொரோனா பெருந்தொற்று கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், கர்ப்பிணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே, கேரள மாநிலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி, 24 மணி நேரத்திற்குள் 192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கேரளாவில் கொரோனா பாதித்து […]
30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். பட்டா விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் புதிய முறையை அரசு பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் நிலம் தொடர்பான உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துகளை இ-சேவை மையம் மூலமோ அல்லது https://tamilnilam.tn.gov.in/citizen/ என்கிற இணையத்தளம் மூலம் நேரடியாக விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது […]
ஜூன் 7ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ள அமித்ஷாவை, தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கொள்கையை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் அறிவித்துள்ளார். அதே சமயம் மத்தியில் ஆளும் பாஜகவை விட, தமிழ்நாட்டை ஆளும் திமுகவையே கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அரசியலில் பணிகளில் ஈடுபட்டு வரும் […]
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட காலமாகவே 8-வது ஊதியக்குழுவின் உருவாக்கத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025இல் நிறைவடைய உள்ள நிலையில், 8-வது ஊதியக்குழுவுக்கான பரிந்துரைகள் ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரவேண்டும். ஆனால், இதில் சற்று தாமதம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பலவிதமான கேள்விகள் தற்போது எழுகிறது. அதாவது, மாத ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்..? […]

