பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ, இன்று காலை பெங்களூரு அருகே நடந்த சாலை விபத்தில் காலமானார். இந்த விபத்தில் காயமடைந்த ஷைன், அவரது தாயார், சகோதரர் மற்றும் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரிக்கு அருகிலுள்ள பாலக்கோட்டை அருகே காலை 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஷைன் டாமின் குடும்பத்தினர் எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது. அவர்களின் […]
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான வருமான ஆதரவுத் திட்டமாக மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி 3 தவணை உதவியை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின்படி, இதுவரை மொத்தம் 19 தவணை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 9.8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 20-வது தவணை எப்போது வெளியிடப்படும்..? அதாவது, 20-வது தவணை நிதி ஜூன் […]
இயக்குநர் பாரதிராஜாவின் உடன்பிறந்த மூத்த சகோதரி தங்கத்தாய் தேனியில் காலமானார். கடந்த சில மாதங்களாக சினிமா துறையில் பிரபலங்களின் மரண செய்தி அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் அதிகமான பிரபலங்கள் மாரடைப்பால் இறந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவும் ஒருவர். மனோஜ் பாரதிராஜா தாஜ்மஹால் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார். கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு […]
இன்றைக்கு பட்டா வாங்குவது என்பது பலருக்கும் சவாலான விஷயமாகவே உள்ளது. பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எளிதாக இருந்தாலும், நடைமுறையில் உள்ள பழக்கங்கள் மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்க வேண்டும் என்றும் காலதாமதம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. புதிதாக நிலம் வாங்குவோர், வீடு வாங்குவோர் பத்திரப்பதிவு முடிந்த பின், விஏஓ, சர்வயேர், தாசில்தார் என ஒவ்வொருவரையும் […]
இந்தியாவில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள புதிய மாறுபாடுகளால் கடுமையான அச்சுறுத்தல்கள் இல்லை என்று முன்னணி இந்திய பயாலஜிஸ்ட் டாக்டர் வினீதா பால் தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில், கார்கள், விலையுயர்ந்த மொபைல்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை தவணை முறையில் வாங்குவது பொதுவானது. மக்கள் வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலமும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். கடன் வழங்குவதற்கு முன், வங்கி அந்த நபரின் கடன் வரலாறு, வருமான ஆதாரம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது, இதனால் பொறுப்பான நபர் சரியான நேரத்தில் கடன் தவணைகளை செலுத்த முடியும். ஆனால் […]
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் முன்னேற்றத்தையும், அவர்களின் நிலையையும் மேம்படுத்தும் நோக்கில் பிரதான் மந்திரி சுகன்யா சம்ரித்தி யோஜனாவை எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், பெற்றோர் தங்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கைத் தொடங்கலாம். இந்த கணக்கை பூஜ்ஜிய இருப்பில் […]
சென்னையில் இன்றைய (ஜூன் 6, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.74 ஆயிரத்தை கடந்து உச்சத்தை தொட்டது. அமெரிக்க நாட்டின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது மற்றும் உலகில் பல்வேறு பகுதிகளில் […]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரி நடவடிக்கைகள் உலகளாவிய வர்த்தகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக புகழ்பெற்ற நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் ப்ராக்டர் & கேம்பிள் (P&G), வரவிருக்கும் இரண்டு ஆண்டுகளில் சுமார் 7,000 வேலைகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை, மொத்த ஊழியர்களில் 6% அளவுக்கு இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலேயே மிகப்பெரிய சந்தையை வைத்திருக்கும் இந்த நிறுவனம், சீரற்ற நுகர்வோர் தேவை, […]
தக்லைஃப்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான தக்லைஃப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். நாயகன் படத்திற்கு பிறகு 34 ஆண்டுகளுக்கு பின் கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் […]

