கோவிட் தொற்றின் புதிய மாறுபாடு காரணமாக தற்போது நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒரு வகைக்கு NB.1.8.1 அல்லது ‘நிம்பஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இது சில அசாதாரண அறிகுறிகளைக் காட்டுகிறது. உலகம் முழுவதும் விரைவான விகிதத்தில் பரவுகிறது. இந்த புதிய மாறுபாட்டின் பயங்கரமான அறிகுறிகள் இருந்தபோதிலும், WHO மற்றும் CDC போன்ற சுகாதார அமைப்புகள், பெரும்பாலான மக்களிடையே மிகவும் கடுமையான நோய்க்கு வழிவகுக்காது என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றன. […]

சிவகங்கை லாக் அப் மரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதற்கிடையெ பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, சமீபத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் […]

“பசங்க” திரைப்படத்தில் ஜீவா கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ஸ்ரீராம்க்கு நேற்று எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது. 2009 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம். அந்த திரைப்படத்தில் ஜீவா கேரக்டரை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்து இருக்க முடியாது. வில்லத்தனம் கலந்த மாணவனாக அருமையான நடிப்பை […]

அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தலை, கழுத்து, தொடை என பல பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோவிலில் 28 வயதான அஜித் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் இருந்து நிக்தா என்பவரும் அவருடைய தாயார் சிவகாமியும் மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோயிலுக்கு வந்ததும் தனது […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சு வார்த்தைகளும் சூடு பிடித்துள்ளன. இந்த தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. இரு கட்சிகளும் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது தேமுதிக. ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேமுதிக […]

8வது ஊதியக் குழுவின் கீழ் ஓய்வூதியக் காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 8வது ஊதியக்குழு தொடர்பான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. ஆனால் 8வது குழுவின் தலைவர், உறுப்பினர்களை முறையாக நியமித்தல் மற்றும் விரிவான குறிப்பு விதிமுறைகள் (ToR) வெளியிடுதல் ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 8வது ஊதியக் குழு ஜனவரி 1, […]