கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து சம்பவத்தில் வெளியான புதிய தகவல் வெளியாகி உள்ளது.. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக கேட் கீப்பரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.. அவர் வடமாநிலத்தவர் என்பதால் அவருக்கு தமிழ் தெரியாததும் விபத்துக்கு முக்கிய காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. இந்த நிலையில், கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து […]

மதுரையில் உள்ள பழைய பேப்பர் குடோனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.. மதுரையில் வைகை தென்கரையின் ஓபுலா படித்துறை பகுதியில் உள்ள பழைய பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.. அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ வேகமாக பரவி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.. இதனால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளது.. தகவலறிந்து பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.. இந்த விபத்தில், குடோனில் […]

சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 1980ல் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை அருணா. இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். கரிமேடு கருவாயன், முதல் மரியாதை உட்பட பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் […]

டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து , அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்திலும் வெள்ள பேரழிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு – மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் பலர் அடித்து செல்லப்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், நியூ […]

மத்திய அரசால் தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) பெண் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தில் சேருவதன் மூலம், எதிர்காலத்தில் பெண்கள் தங்கள் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு நிதி உதவி பெறுவார்கள். இந்த நோக்கத்துடன் மத்திய அரசு இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், பெற்றோர்கள் மாதத்திற்கு ரூ. 250 உடன் முதலீடு செய்யத் தொடங்கலாம். நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், […]

கவுதமாலா நாட்டில் அடுத்தடுத்து பல முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால் வீடுகளில் விரிசல் காணப்பட்டதால் சாலையில் மக்கள் தஞ்சமடைந்தனர். மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் முதல் நிலநடுக்கம் 5.2 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் கவுதமாலா நகரத்தில் இருந்து 60 கி.மீ., தொலைவில் ஏற்பட்டது. அதன் பின்னர் பல அதிர்வுகள் தொடர்ந்து பதிவாகின. அமெரிக்க புவியியல் ஆய்வு’ அறிக்கையின்படி, புதன்கிழமை அதிகாலை 3.11 மணியளவில் இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் […]

இன்றைய வாழ்க்கை முறையில், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதாலும், உடற்பயிற்சிக்கு நேரமின்மையாலும் பல உடல்நலப் பிரச்சினைகள் எழுகின்றன. இவற்றில் உடல் பருமன், செரிமானப் பிரச்சினைகள் மற்றும் இதய நோய்கள் ஆகியவை அடங்கும். இந்த சூழ்நிலைகளில் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். இயற்கை மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை நம் உணவில் சேர்ப்பதன் மூலம் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். சக்திவாய்ந்த மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலப்பொருள் இஞ்சி. இஞ்சி […]