அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவியை உள்ளூர் ரவுடிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நிலையில், ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையை மறித்து நூற்றுக்கணக்கான சிறுமிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜம்தோலி பகுதியில் அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவரை உள்ளூர் ரவுடிகள் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையை மறித்து நூற்றுக்கணக்கான மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெய்ப்பூரில் பெய்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் […]
உக்ரைனில் மீண்டும் போர் தொடங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து நடந்த பயங்கரமான குண்டுவெடிப்புகளில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அடுத்தடுத்தடுத்து முக்கிய பகுதிகளில் குண்டுகள் வெடித்ததால் கார்கள் தீப்பிடித்து கொளுந்துவிட்டெரிந்தது. இது குறித்து கீவ் நகரத்தின் மேயர் விட்டாலி க்லிட்ச்கோ குண்டு வெடிப்பு பற்றி தெரிவித்துள்ளார். ’மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பழமைவாய்ந்த நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பல்வேறு அரசு […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறி வாங்கிய வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், அவரது பாதுகாவலர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் காய்கறிகளை வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அவற்றை உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்க தமிழக அரசு மஞ்சப்பை திட்டத்தை அறிமுகம் செய்தது. இருப்பினும் […]
மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த நட்பு, இளைஞர் ஒருவரை அரை நிர்வாணமாக முட்புதருக்குள் தவிக்கவிட்டு சென்றுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் பகுதியில் வசித்து வருபவர் காத்தவராயன். இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். அப்போது இருக்கையில் இவருக்கு செந்தில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நட்பாக பழகி வந்துள்ளனர். இதையடுத்து, காத்தவராயன் தனது ஊர் திருவிழாவிற்கு செந்தில் குமாரை அழைத்துள்ளார். […]
தீபாவளி பண்டிகையையொட்டி 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை காலங்களில் மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம், பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க, ஆண்டுதோறும் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் […]
பேருந்து நிறுத்தத்தில் பள்ளி சீருடையில் உள்ள மாணவிக்கு, பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை அமைந்துள்ளது. அதன் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பேருந்து நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிக்கு, மாணவர் ஒருவர் தாலிகட்டியுள்ளார். தனது நண்பர்கள் பூ போட்டு […]
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜி.பி. முத்துவை சக போட்டியாளர்கள் சீண்டிப் பார்க்க தொடங்கியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் நேற்று தொடங்கியது. இதில், நேற்று தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது […]
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. முலாயம் சிங் யாதவ், உடல்நலக்குறைவு காரணமாக ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்தார். 1989-1991, 1993-1995, 2003-2007 காலகட்டத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த அவர், 1996-1998ஆம் ஆண்டுகளில் தேவகௌடா மற்றும் இந்தர் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடி, மின்னல் உள்ளிட்ட காரணங்களால் 3 நாட்களில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அண்மைக்காலமாகத் தொடர் மழை பெய்து வருகிறது. மழை தொடர்பான விபத்துகளில் அக்டோபர் 6 முதல் 8 வரை மட்டும் உத்தரப்பிரதேசத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். […]
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் காலமானார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் உள்ள ஐசியு வார்டில் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாகவும் உடல் நல குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். முன்னதாக, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரின் மனைவி சாதனா […]