சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துக்கு பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதை உறுதி செய்து கடந்த பிப்ரவரி மாதம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். சமீபத்தில் இந்த படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைத்து இருப்பதாக அறிவித்தனர். மேலும் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. சில தினங்களுக்கு முன் டெல்லி சென்று வந்த ரஜினிகாந்திடம் இதுபற்றி கேட்டபோது ஜெயிலர் படத்தில் அடுத்ததாக நடிக்க […]
ஆளுநரை சந்தித்து அரசியல் பேசுவதில் தவறில்லை. யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான், ”அரசியல் என்பது ஒரு வாழ்வியல், அனைத்து இடங்களிலும் அரசியல் பேச வேண்டும் என எப்பொழுது சொல்கிறார்களோ, அப்பொழுது தான் நாடு உருப்படும். ஆளுநர் ஆர்.என்.ரவியை நியமித்தது யார். ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தானே? அப்பொழுது அது சார்ந்து […]
ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் லக்ஷ்மணன் வீர மரணம் அடைந்தார்.. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்றனர்.. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் பதிலடி கொடுத்தனர்.. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.. இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.. […]
சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடுகிற நேரத்தில், இந்தியாவில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தான் ஏற்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜகவிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க இந்த நேரத்தில் அனைவரும் ஒருமித்த உணர்வுடன் ஒன்றுபட வேண்டும். பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், ஏழை எளிய மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய அழிவு […]
தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
சட்டத்தை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் காணொலி மூலம் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ”மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஒரு மகிழ்ச்சி இருக்கும். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அப்படி எனக்கு இல்லை. போதைப் […]
வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தில் அடி பம்போடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் வேலையாட்களை அனுப்பி அடி பம்பை அகற்றி விட்டு அந்த இடத்தில் கால்வாய் அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது. பைக், ஜீப் போன்றவற்றை சேர்த்து சிமெண்ட் சாலை போடப்பட்டதை தொடர்ந்து, அடிபம் போடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது, வேலூர் மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பணியை செய்த ஒப்பந்ததாரரின், ஒப்பந்தம் ரத்து […]
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், நேற்று கோத்தகிரி அருகே உள்ள டானிங்டன் பகுதிக்கு மது போதையில் வந்த உள்ளூர் வாசி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது கொடநாடு சாலையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலை மழையில் நனைந்து கொண்டிருப்பதை பார்த்ததும். உடனே, சிலைக்கு அருகில் சென்ற அந்த போதை ஆசாமி, கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்று சிலை அமைக்கப்பட்டுள்ள தூண் […]
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே இருக்கும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியராக ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அடுத்த மாதம் ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில், பள்ளியில் படித்து வரும் மாணவர்களிடம் வகுப்புஎடுக்கும் போது, இது தான் காதலிக்கும் வயது. இந்த வயதில் காதலிக்காமல் எந்த வயதில் காதலிப்பது என்றும், அதுபோல் சக மாணவிகளுக்கு, மாணவர்களை லவ் லெட்டர் கொடுக்க சொல்லி கூறியுள்ளார். […]
கர்நாடகாவில் இரு சமுகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர்.. கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஹுலிஹைடர் கிராமத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.. தகவலறிந்த காவல்துறையின் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து இதையடுத்து உள்ளூர் நிர்வாகம் அப்பகுதியில் 144 தடை விதித்துள்ளது. காவல்துறையினர் மோதலுக்கான காரணம் விசாரணை நடத்தி […]