fbpx

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகை தினத்திற்கு ஏற்ப வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடலாம். ஆனால், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை என்பது பொருந்தும். தற்போது மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. விடுமுறை நாட்கள்… 3.3.2023 […]

இந்தியா- சிங்கப்பூர் இடையே யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறை மோடி இன்று துவக்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோர் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையேயான எல்லைதாண்டிய இணைப்புச் சேவைகளான இந்தியாவின் UPI முறை மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகியவற்றை இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த சேவையை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் […]

தமிழகத்தில் வறண்ட என வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று முதல் 24-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி […]

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இரண்டு கிமீ ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இரண்டு கிமீ ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான AFAD, 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஹடாய் மாகாணத்தில் உள்ள டெஃப்னே நகரத்தை மையமாகக் கொண்டது என்று கூறியது. அதைத் […]

நம் அன்றாட வாழ்க்கையில் எழுதுபொருட்கள், டூத் பிரஷ்கள் மற்றும் ரேஸர் பிளேடுகள் போன்ற பல பொருட்களை பயன்படுத்துகிறோம்.. ஆனால், ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால், அதன் வடிவம் மற்றும் செயல்பாட்டின் பின்னால் ஒரு முக்கிய காரணமும் நோக்கமும் இருக்கிறது. சில பொருட்கள் ஏன் ஒரே வடிவத்தில் மட்டும் கிடைக்கிறது.. யார் அதை உருவாக்கினார்கள்.. என்பது போன்ற பல கேள்விகள் எழும்… அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளேடு ஏன் ஒரே […]

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும், கிழிந்த, பழைய மற்றும் பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் புதிய நோட்டுக்களை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறை உண்டு. ஆனால் இது நம்மில் பலருக்கு தெரியாது. கிழிந்த அல்லது மோசமாக வைக்கப்பட்ட நோட்டுகள் ஏடிஎமில் இருந்து பண பரிவர்த்தனையின் போது உங்களுக்குப் பல முறை வந்து விடும். கிழிந்த நோட்டைக் கண்டால் என்ன […]

கணினியில் ஃபயர்பாக்ஸ் பிரவுசரை பயன்படுத்தி எளிய முறையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு Translate செய்யும் முறை குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்வோம். கணினியில் ஃபயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தினால், மொழிபெயர்ப்பு எக்ஸ்டென்ஷனை பதிவிறக்கம் செய்து, விரும்பும் இணையப் பக்கத்தை முழுமையாக தமிழில் வாசிக்க முடியும். அந்தவகையில், முதலில் ஃபயர்பாக்ஸ் அப்ளிகேஷனை கணினியில் திறந்ததும், அதன் வலது மூளையில் மூன்று கோடுகள் அடுக்கப்பட்டிருக்கும். அது அப்ளிகேஷன் மெனு. அதனை க்ளிக் செய்தால், பட்டியல் […]

குடும்ப வன்முறை மற்றும் மனைவியை தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து கணவர் மற்றும் அவரது உறவினர்களை மும்பை நீதிமன்றம் விடுவித்துள்ளது.. மேலும் ஒரு பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காதது அவள் கொடுமைக்கு ஆளானதாக அர்த்தமல்ல என்றும் தெரிவித்துள்ளது… கடந்த 2011 அன்று மும்பையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.. இதை தொடர்ந்து 2012-ம் ஆண்டில், அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது உயிரிழந்த […]

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். ஆணையர்‌, வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறை சென்னை அவர்களின்‌ ஆணைப்படி 8ம்‌ வகுப்பு தேர்ச்சியுடன்‌ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள்‌ 10ம்‌ வகுப்பு தமிழ் மற்றும்‌ ஆங்கில மொழி பாடங்களில்‌ தேர்ச்சி பெற்றால்‌ 10ம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழும்‌ 10ம்‌ வகுப்பு தேர்ச்சியுடன்‌ […]

2050ம் ஆண்டில் உலகம் முழுவதும் 2,600க்கு அதிகமான மாநிலங்கள் மற்றும் மாகாணங்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் என்றும் இதன் மூலம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் மனிதர்கள் ஏற்படுத்தும் மாசுக்களால் காலநிலை தொடர்ந்து இயல்பை இழந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காலநிலை மாற்றம் குறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த Cross Dependency Initiative (XDI) எனும் ஆய்வு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் […]