fbpx

அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று மற்றும் நாளை வறண்ட வானிலையே நிலவக்கூடும். மேலும் உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான […]

நம்மில் பெரும்பாலானவர்களின் நகங்களில் வெள்ளை நிற புள்ளிகள் இருப்பதை கண்டிப்பாக பார்த்திருப்போம்… குறிப்பாக இளம் வயதிலேயே நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருக்கும்.. உடலில் கால்சியம் இல்லாததே இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது. ஆனால் இதற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்… நகங்களில் காணப்படும் வெள்ளை புள்ளிகள் அறிவியல் மொழியில் லுகோனிசியா என்று அழைக்கப்படுகிறது. உடலில் அதிகப்படியான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடலில் உள்ள இரத்த […]

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு […]

இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். இந்த […]

புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் ‘சுனாமியை’ இந்தியா எதிர்கொள்ளும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜேம் ஆபிரகாம் எச்சரித்துள்ளார். உலகமயமாக்கல், வளர்ந்து வரும் பொருளாதாரம், மக்கள் தொகை மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் சுனாமியை இந்தியா எதிர்கொள்ளும் என்று முன்னணி புற்றுநோயியல் நிபுணர் ஜேம் ஆபிரகாம் எச்சரித்துள்ளார். புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான தடுப்பூசிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு டிஜிட்டல் […]

பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்தாரா என்ற சந்தேகத்தின் பேரில் களக்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கட்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 28). இவர் மனநலம் சரியில்லாதவர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், இசக்கியம்மாளுக்கு கடந்த 13ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதற்கிடையே, ஆட்டோ ஒட்டுநராக உள்ள ரமேஷ், […]

காதலிக்க மறுத்த சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தப்பியோடிய இளைஞரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் பதோகி என்ற பகுதியில் 15 வயது சிறுமியை 22 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். நேற்று மாலை தனது சகோதரியுடன் அந்த சிறுமி பயிற்சி நிறுவனத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அரவிந்த் விஸ்வகர்மா, அந்த சிறுமியின் தலையில் துப்பாக்கியால் […]

கொரோனா காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட இலவச ரேஷன் திட்டத்தை மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. மற்றொரு புறம் அரசின் முக்கிய திட்டமான “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, ரேஷன் கடைகள் அனைத்திலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட்ஆப் சேல் கருவிகள் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், பயனாளிகளுக்கு உரிய அளவு ரேஷன் கிடைப்பது அவசியம் ஆகும். […]

தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படங்கள் அஜித் நடித்து வெளியான துணிவு திரைப்படமும், விஜய் நடித்து வெளியான வாரிசு திரைப்படமும். இந்த இரு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளியிடப்பட்டாலும் தமிழக அளவில் நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் என்றால் அது துணிவு திரைப்படம் தான். ஆனால் தொடக்கத்தில் வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தாலும் நாட்கள் செல்ல, செல்ல குடும்ப கதைகளின் ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி […]