விவசாயிகள் கூட்டுறவுச்‌ சங்கங்களை அணுகி தகுதிக்கு ஏற்படக்‌ கடன்‌ பெற்று கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-07ஆம்‌ ஆண்டு முதல்‌ பயிர் கடனுக்கான வட்டி 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக்‌ குறைக்கப்பட்டு, தற்போது வரை 7 சதவீத வட்டியில்‌ பயிர்க்‌ கடன்‌ வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 சதவீதம்‌ வட்டி இழப்பைத்‌ தமிழக அரசு வட்டி மானியமாகக்‌ கூட்டுறவுச்‌ சங்கங்களுக்கு வழங்கி வருகின்றது. 2009ஆம்‌ ஆண்டு முதல்‌ உரிய காலத்திற்குள்‌ […]

நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்ற பழமொழி உண்டு. இதற்கு உணவினை மென்றுத் தின்றால் நுாறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என்பதுதான் பொருள். அப்படி நம் உடலில் மிகவும் இன்றியமையாததாக அமைந்துள்ளது பற்கள். குழந்தைகளின் பற்களை பராமரிப்பது குறித்து நமது குழந்தைகள் நல மருத்துவ வல்லுநர் விளக்குகிறார். குழந்தைகளுக்கு முதன்முதலாக பற்கள் முளைக்கும் தருவாயில் நீராகாரத்திலிருந்து (தாய்ப்பால் உள்பட) திட உணவுகளை உண்ண ஆரம்பிக்கின்றனர். குழந்தைகள் வளர வளர […]

தைராய்டு பிரச்சனை குறைக்க ஒரு அருமையான பானம் எப்படி செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். பொதுவாக தைராய்டு பிரச்னை பரம்பரைத் தன்மை காரணமாக வரும். பாட்டி, அம்மா, அம்மாவுடன் பிறந்தவர்கள் அல்லது அப்பாவுடன் பிறந்தவர்கள் இந்தப் பிரச்னை இருந்திருந்தால், அடுத்ததாக வரப்போகிற தலைமுறைக்கும் வர வாய்ப்புள்ளது. தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சை மூலம் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் வரும். அதனை குறைக்க ஒரு அருமையான […]

மீல் மேக்கரை யாரெல்லாம் சாப்பிடலாம் ? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது ? இதில் அடங்கியுள்ள நன்மை, தீமைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். மீல்மேக்கர் என்பது ஒரு உணவுப் பொருள் தான். இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். இது சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த உணவு பொருளை தயாரித்து விற்ற ஒரு கம்பெனியின் பிராண்ட் பெயரிலேயே இதனை மேல் மீல்மேக்கர் என்று அழைத்து வருகிறோம். இது கடினமான நிலையில் […]

நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியில் இயற்கை எழில் மிகுந்த மலை மீது அழகுற அமைந்துள்ளது இந்த கந்தகிரி பழனி ஆண்டவர் திருக்கோயில். 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் பழனி மலையில் உள்ளது போலவே முருகபெருமான் ஆண்டி கோலத்தில் இருப்பதால் ‘பழனி ஆண்டவர்’ என்றே அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் மூலவரான பழனி ஆண்டவரை வழிபட்டால் விரைவில் திருமணமாகும் என்பதும், முருகனுக்கு சஷ்டி பூஜை செய்து மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது […]

2000ஆம் காலகட்டத்தில் ஓஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், 2001ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். புன்னகை இளவரசி சினேகா, தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும், நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் […]

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சத்யபிரியா. இவர், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், சத்யபிரியா வாழ்க்கையில் நடந்த பல சோகமான சம்பவங்கள் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சத்யபிரியா தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடன் காதலில் இருந்து இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு சத்தியபிரியாவின் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அந்த […]

நாட்டுப்புற பாடகியும், சினிமா பின்னணி பாடகியுமான ராஜலட்சுமி செந்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டியில், “எங்களோட தொழில் நிறைய சவால் நிறைந்தது. என் கணவரோட சகோதரிக்கு பிரசவ நேரம். பயங்கரமான ரிஸ்கான சூழல். தாய், சேய் இருவரையும் காப்பாற்ற முடியாத நிலை. அப்போது, எங்களுக்கு ஒரு நிகழ்ச்சி இருந்தது. நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. குறிப்பிட்ட நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக வேற சென்று […]

தனுஷ் முதன் முதலில் ஆனந்த் எல். ராய் என்பவரின் இயக்கத்தில் ராஞ்சனா எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் அட்ராங்கி ரே. இப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது மீண்டும் இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஆம், இந்தியில் தனுஷ் நடிக்கப்போகும் நான்காவது படமாக […]

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% கடைகளை ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீதம் அல்லது மொத்த கடைகள் 20க்கும் குறைவாக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு கடை ஒதுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய கிராம வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சிகள் […]