உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள கட்கா கிராமத்தில், வானில் இருந்து வயலில் மேகம் விழுவது போன்ற விசித்திரமான வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருவநிலை மாறுபாடு காரணமாக இதுபோன்ற பல்வேறு இயற்கை நிகழ்வுகள் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விஞ்ஞானிகளும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகின்றனர். மிக அரிய நிகழ்வு என்ற போதிலும், இதுபோன்ற சில வீடியோக்கள் உண்மையா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில், உத்தரபிரதேச […]
சேலம் மாவட்டத்தில் 50% மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2025-26ஆம் நிதியாண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்த மாவட்டம் ஒன்றுக்கு திறமையும் ஆர்வமும் உள்ள 10 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள பயனாளிகள் […]
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து வகை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் திருத்தம் இருப்பின் ஜூன் 29-ம் தேதி முறையிடலாம். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியாகும். தொடர்ந்து அனைத்து விதமான ஆசிரியர்களுக்கான பொது […]
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முதலாமாண்டு சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக மருத்துவ அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் அனைத்து கூற்றுகளும் மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. விசாரணையில் பாதிக்கப்பட்டவரின் உடலில் கடித்து வைத்த பற்களின் அடையாளங்கள், நகக் கீறல்கள் மற்றும் கட்டாய பாலியல் வன்கொடுமைக்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்கு வங்க […]
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் ஜூன் 30-ம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் […]
மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் சாதிப் பெயர்களை ரகசியமாக ஆசிரியர்கள் வைக்க வேண்டும். மாணவர்களின் சாதியை வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் குறிப்பிடக் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களின் சாதி பெயரை மறைமுகமாக கூட அடைப்புக்குறிக்குள் குறிப்பிடக் கூடாது. சாதியை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் மாணவர்கள் பட்டைகள் அணிய தடை. சாதிய குறியீடுகளை வெளிப்படுத்தும் வகையில் சைக்கிளில் […]
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களது குழந்தைகளின் உயர் கல்வி பயில்வதற்கான முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1,00,000, கலை மற்றும் அறிவியல் கல்விக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகள் உயர் கல்வி பயிலும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டில் இருந்து உயர்த்தப்படவுள்ளது. தமிழக அரசுப் குழந்தைகள் பணியாளர்களின் கல்வியில் உயர் சேர்வதற்கான முன்பணத்தை அரசு வழங்கி வருகின்றது. அதில், […]
சுமார் 16,500 கோடீஸ்வரர்கள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளியேறுவார்கள். இது சீனாவிலிருந்து வெளியேறும் 7,800 பணக்காரர்களின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோடீஸ்வரர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்களின் வேகம் குறையும். ஹென்லி தனியார் செல்வ இடம்பெயர்வு அறிக்கை 2025 இன் படி, இந்த ஆண்டு சுமார் 3500 கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு […]
ஆக. 1 முதல் GPay, Paytm, PhonePe உள்ளிட்ட UPI பேமெண்ட் செயலிகளில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த டிஜிட்டல் உலகத்தில் UPI பரிவர்த்தனை முறையே பெரும்பாலான மக்கள் நம்பி உள்ளனர். சிறிய டீ கடைகள் முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் UPI முறையிலேயே பணம் அனுப்பி வருகின்றனர். மற்றவர்களுக்கு செய்யும் பண பரிவர்த்தனைக்கும் UPI செயலிகளையே நம்பி உள்ளனர். UPI பேமெண்ட்களின் எண்ணிக்கை […]
தேர்தல் பிரச்சாரத்தின்போது துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த அதிபர் டிரம்ப் , அமெரிக்க அதிபர் பதவி என்பது காளை சவாரி செய்வதை விட ஆபத்தான தொழில் என்று தெரிவித்துள்ளார். நாடு தழுவிய தடை உத்தரவுகளை பிறப்பிக்கும் கூட்டாட்சி நீதிமன்றங்களின் திறனைக் கட்டுப்படுத்தியதற்காகவும், பிறப்புரிமை குடியுரிமை உத்தரவு மற்றும் பிற நிர்வாக முடிவுகளை செயல்படுத்துவதில் அரசாங்கம் முன்னேற அனுமதித்ததற்காகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்தார். […]