அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர். ஆர். என். ரவியை சந்தித்தார்.. திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து ஆளுநரிடம் அவர் மனு அளித்ததாக கூறப்படுகிறது.. ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி “ திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்தோம். 2021-ம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை ஆளுநரிடம் […]
வங்கதேசத்தில் சரத் மணி சக்ரபர்த்தி என்ற 40 வயது இந்து நபர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் வங்கதேசத்தில் நடந்த 2-வது சம்பவம் இதுவாகும். மேலும், நாட்டில் தொடரும் அமைதியின்மைக்கு மத்தியில், வெறும் 18 நாட்களில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட 6வது கொடிய தாக்குதல் இதுவாகும். மளிகைக் கடை உரிமையாளரான சரத் மணி, திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் நர்சிங்டி மாவட்டத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகக் […]
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.. அதன்பின்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. 202,2023, 2024 ஆகிய ஆண்டுகளில் திமுக அரசும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கியது.. ஆனால் 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் […]
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை உச்சி தூணில் தீபமேற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.. இந்த மனுவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது.. இந்த வழக்கில் கோயில் தரப்பு, தர்கா தரப்பு, மனு […]
குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க, பலருக்கு சூடான பானங்களை அருந்தும் பழக்கம் உண்டு. அவர்கள் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சூடான தேநீர் மற்றும் காபி குடிக்கிறார்கள். வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும் இவற்றைத் தருகிறார்கள். இருப்பினும், இந்தப் பானங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தேநீர் மற்றும் காபியில் உள்ள காஃபின் குழந்தைகளின் தூக்கம், நரம்பு மண்டலம் மற்றும் மூளை வளர்ச்சி ஆகியவற்றில் எதிர்மறையான […]
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அறிமுகம் தேவையில்லை.. தனது வசீகரிக்கும் இசையால் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் ரஹ்யாம்.. இந்திய இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்ற பெரும் ரஹ்மானையே சேரும்.. பாரம்பரிய செவ்வியல் இசையிலிருந்து பாப் இசை வரை அனைத்து வகையான இசையையும் கலந்து மேஜிக் செய்த ஜாம்பவான். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் சிறப்பு வாய்ந்தது. இதயத்தைத் தொடும் இனிமையான இசை மட்டுமல்ல.. உற்சாகமூட்டும் […]
சமூக ஊடகங்களில் சமீபத்தில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், அரசுப் பணியில் உறுப்பினர்கள் இல்லாத குடும்பங்களுக்கு மத்திய அரசு 10 கிராம் தங்கத்தை இலவசமாக வழங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியே அறிவித்ததாகவும் அந்தக் காணொளியில் காட்டப்பட்டுள்ளது. ஆதார் அட்டைகளின் அடிப்படையில் தங்கம் விநியோகிக்கப்படும் என்று கூறப்படுவதால், பலரும் இதை உண்மை என்று நம்பிப் பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும், மத்திய அரசு நிறுவனமான […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
வெனிசுலா மதுரோவும் அவரது மனைவியும் குற்றமற்றவர்கள் என்று ஒப்புக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வெனிசுலா அதிபர் மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் தொடர்ந்து, துணை அதிபர் டெல்சி ரொட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களில், தலைநகர் காரகாஸில் திடீர் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் […]
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபூர் பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண், தனது குழந்தையின் எதிர்காலத்திற்காக மறுமணம் செய்ய மறுத்ததால், காதலனால் கழுத்தறுத்து கொல்லப்பட்டதும், பின்னர் அந்த நபரும் தற்கொலை செய்துகொண்டதும் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. எல்லாபூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா (30) என்பவருக்கும் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக […]

