“ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க!” என இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு ரீல்ஸ் வீடியோவால், தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமமான கூமாபட்டி உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கூமாபட்டி சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கை சூழல் […]
ரேஷன் கடைகளுக்கு மார்க்கெட்டுகளில் இருக்கும் எடை எந்திரம் போன்று ரசீது வழங்கும் எந்திரத்துடன் கூடிய நவீன தராசுகளாக வாங்க அரசு பரிசீலித்து வருகிறது அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் […]
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறி வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸிற்கு ஆதரவாக ஈரான் செயல்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், ஈரானின் அணு ஆயுத கொள்கை தொடர்பான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துள்ளது. ஈரானின் அணு ஆயுத முகாம் […]
தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த சில மாதங்களாக நிர்வாகப் பதவிகள் தொடர்பாக சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகியான ஹரிஷ், கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். “13 வருடமாக உயிரையே வைத்து உழைத்தேன்… இனி இந்த கட்சி வேண்டாம்!” எனக்கூறிய ஹரிஷ், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விஜய் மீது உண்மையான நம்பிக்கையோடும், தொண்டுமனப்பான்மையோடும் செயல்பட்டதாகக் கூறும் ஹரிஷ், பொதுச்செயலாளர் ஆனந்த் பணம், சாதி […]
2026ம் கல்வியாண்டில் இருந்து 10ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020 அடிப்படையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை பயமின்றி எழுதும் வகையில் பொதுதேர்வு நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் ஒரு வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. […]
தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜூன் 26) முதல் ஜூலை 1-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு […]
தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜூலை 10 முதல் 17-ம் தேதி வரை தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) குறிப்பிடப்பட்டுள்ள […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், மின்சார விமானங்கள் குறைந்த விலையில் விமானப் பயண வசதியைப் பெறும் என்ற புதிய நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். உலகளவில் நிகழும் பதற்றங்கள் காரணமாக இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன. இந்தநிலையில், பயணிகள் மலிவு விலை மற்றும் நிலையான பயண விருப்பங்களைத் தேடுகிறார்கள். இதுபோன்ற […]
தேர்வு செய்யப்பட்ட 2346 ஆசிரியர்கள் குற்ற பின்னணி குறித்து ஆய்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தகுதி பெற்றவர்களில் மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் 2,346 பேர் கொண்ட தற்காலிக தேர்வுப் பட்டியல் பெறப்பட்டுள்ளது. […]
காபி குடிப்பதால் ஏராளமான உடல்நல நன்மைகள் இருந்தாலும், சில ஆபத்தான தீமைகளும் உள்ளன. சமீபத்திய ஆய்வின்படி, உடனடி காபி பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இன்ஸ்டன்ட் காபி குடிப்பதால், பார்வை தொடர்பான ஒரு கடுமையான நோயான வயதுசார் மாகுலர் சிதைவு (Age-related Macular Degeneration – AMD) ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என சீனாவின் ஹூபே மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வு எச்சரிக்கிறது. […]